Thursday 13 April 2017

"ஜோக்கர்" படத்தின் மூலம் சாமானியருக்கு கிடைத்த தேசிய விருது !!!!


'ஜாஸ்மின்' பாடலை பாடிய திரு. சுந்தர் ரய்யருடன் ஸ்வாரசிய நேர்காணல்......

ஜோக்கர் படத்தின் தயாரிப்பாளர் S.R பிரபு அவர்களுக்கும், இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுக்கும், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களுக்கும் முதலில் எனது மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கிறேன். மேலும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இசையமைப்பாளர் சான்றோன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இந்திய சினிமா இத்திரைப்படத்தை முக்கிய படமாக கருதி நமது தேசிய குழு விருதிற்காக பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி.


என்னுடைய பாடலை சிறந்த பாடலாக அங்கீகரித்ததற்கு தேர்வு குழுவிற்கு எனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துத்கொள்கிறேன்.


நான் பெங்களூருக்கு அண்ணன் "மணல் மகுடி" நாடககுழுவுடன் நாடகம் போடுவதற்காக ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு போன் செய்தார்கள்.



நான் திரையில் பாடிய முதற்பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. என்னை போன்ற விவசாய குடும்பத்திலிருந்து வந்த சாமானியருக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.



நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. என்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துத்கொள்கிறேன்.


திரு. சுந்தர Rayar அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிய வண்ணம் தனது உரையை முடித்துக்கொண்டார்".

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...