Saturday 1 April 2017

கவண் – திரைவிமர்சனம்

இயக்குனர் K .V .ஆனந்த அனேகன் படத்தை தொடந்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் தான் கவண் படத்தின் டைட்டில் போலவே படமும் தமிழ் சினிமாவுக்கு புதுமை இன்று ஊடங்கள் போடும் பொய் வேசங்களை மிக அருமையாக சொல்லும்படம் தான் கவன் ஊடகங்களை தனக்கு பிடித்த அரசியல்வாதிகளுக்கு அதாவது விலைக்கு சென்று மக்களை ஏமாற்றும் ஊடங்கங்கள் அதுமட்டும் இல்லமால் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் தொலைக்காட்சிகளை தோலுரித்து இருப்பது சபாஷ் இந்த தைரியம் பிடித்து இருக்கு.

கவன் இந்த படத்தின் அருமையான நட்சித்திர பட்டாளம் தேவைக்கு அதாவது கதாபாத்திரம்க்கு எற்ப நட்சித்திரங்கள் அதுக்கு முதலில் இயக்குனருக்கு சபாஷ் போடணும் விஜய் சேதுபதி ,டி.ராஜேந்தர், மடோன சபாஷ்டின் நாசர்,ஜெகன், போஸ் வெங்கட் ,பாண்டியராஜ் , விக்ராந்த் , சாந்தினி ,ஆகாஷ் தீப் செய்கள் மற்றும் பலர் நடிப்பில் ஹிப் ஹாப் தமிழன் ஆதி இசையில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் இயக்குனர் K.V.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் கவண்

ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.

அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.

இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இந்த தகவல் தனது தோழியான மடோனாவிற்கு தெரிய வர அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனா, விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.

இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதனால் கடுப்பாகும் போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்‌ஷதீப் சய்கலை தொடர்பு கொள்ள இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.

இதனையடுத்து, முதல்வன் பட பாணியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்‌ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி தான் ஒரு சிறந்த நடிகன் என்று மீண்டும் இந்த படத்தில் நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும் ஒரு நடிகனுக்கு தேவையான எல்லா அம்சங்கள் நிறைந்த படம் அதை நிறைவாக செய்துள்ளார். படத்துக்கு பலம் வசனம் அதை விஜய் சேதுபதி ஸ்டலில் பேசுவது அந்த வசனத்துக்கு மேலும் பலம் கூடுகிறது. மிகவும் கனமான கதாபாத்திரம் அதை மிக அருமையாக நடித்துள்ளார் தான் மீண்டும் ஒரு சிறந்த நடிகன் என்று நிருபித்துள்ளார் .

நீண்ட இடைவெளிக்கு பின் டி.ராஜேந்தர் இந்த படத்தில் நடிக்க வந்துள்ளார் ஏன் வந்தார் என்ற கேள்வி பலருக்கு உண்டு அப்படி என்ன இந்த கதாபத்திரத்தில் இருக்கு என்று அதற்கு அருமையான விளக்கம் தான் இந்த கதாபாத்திரம் இவரின் நடிப்பு இவருக்கு மட்டும் தான் இந்த கதாபாத்திரம் பொருந்தும் என்று இயக்குனர் கணிப்பு தப்பவில்லை அதை மிகவும் அருமையாக கத்தாமல் கதறாமல் மிகவும் சிறப்பாக செய்துள்ளார் .

மடோனா வந்தோ ஆடினோம் கட்டிபிடித்தோம் என்று இல்லாமல் கிடைத்த வாய்ப்பை அருமையாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும் . சில நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கிறார் .

படத்துக்கு மிக முக்கிய பங்கு படத்தின் வில்லன் அக்‌ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.

வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.

ப்சட்த்துக்கு மேலும் பலம் இசை பாடல்கள் அருமை குறிப்பாக பாரதியார் பாட்டை ரீ மிக்ஸ் பண்ணுறேன் என்று சீர்குலைக்காமல் அருமையாக செய்துள்ளார் அதேபோல ஆக்சிஜன் பாடலும் மிக அருமையான மெலடி பின்னணி இசையும் படத்துக்கு மேலும் பலம் என்று தான் சொல்லணும் .

திரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...