Wednesday 26 April 2017

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் லாரன்ஸ் தத்தெடுத்தார்



குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்..
ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது...
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே..

ஶ்ரீனிவாசன்கா, யத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த அந்த குழந்தைகளுக்கு லக்‌ஷன் , லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என்று பெயர் வைத்தார்கள் ..லட்சங்கள் இல்லையென்றாலும் பெயரிலாவது இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ...

நான்கு குழந்தைகளையும் வளர்க்க சிரமப்படுகிற விஷயம் பத்திரிக்கையாளர் திரு.அமலன் மூலம் தெரிந்து கொண்ட லாரன்ஸ் அந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டார்...3.3.வயதுடைய அந்த குழந்தைகளின் வளர்ப்பு படிப்பு எதிர்காலம் எல்லாம் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி தத்தெடுத்துக் கொண்டார்.
லக்கிக் குழந்தைகள்...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...