Saturday 15 April 2017

விஜய் சேதுபதியின் 25ஆவது படம் "சீதக்காதி".

குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் ஈன்ற நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25ஆவது படம் "சீதக்காதி".இந்த படத்தை இயக்குபவர் ,"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் .விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் " சீதக்காதி".


Passion studios என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் "சீதக்காதி" கதை அமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.
" சீதக்காதி" படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி , இந்த கதாப்பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் "சீதக்காதி" பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...