Thursday 13 April 2017

ஆதிராஜன் இயக்கத்தில்...விஜயராகவேந்திரா - ஹரிப்பிரியா நடிக்கும் ”சிலந்தி-2”

தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2”


கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு..சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில்
​ ​விஜய
​ ​ராகவேந்திரா கதாநாயகனாக நடித்திருக்கிறார்..
​ இவர் கன்னடத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவர். நட்சத்திர குடும்ப வாரிசு.​(​Raghavendra is the son of famous Kannada film producer
​ , S. A. Chinne Gowda. He is also related to the actor and singer Rajkumar and is the cousin of the actors Shiva Rajkumar, Raghavendra Rajkumar and Puneeth Rajkumar. His brother, Sriimurali, is also an actor. He married Spandana in 2007
​​)

அர்ஜுனுடன் வல்லக்கோட்டை.. கரனுடன் கனகவேல் காக்க.. சேரனுடன் முரண்.. அட்டக்கத்தி தினேஷுடன் வாராயோ வெண்ணிலவே.. நானியுடன் ஜமீன் உட்பட தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் 30 படங்களில் நடித்திருக்கும் ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. ஒரு ஸ்பெஷலான குத்துப்பாடலுக்கு சிறுத்தை புகழ் மேக்னா நாயுடு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார்.. இவர்களுடன் ஜஸ்வர்யா விஷால் ஹெக்டே.. சத்யஜித்.. ரங்கா உட்பட பலர் நடித்துள்ளனர்..
இசை-பெ.கார்த்திக்.. மழை..லீ..பொக்கிஷம்..ராமன் தேடிய சீதை.. சென்னை 28 பார்ட்-2.. உட்பட பல படங்களில் பணியாற்றிய ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. எடிட்டிங் ஸ்ரீகாந்த்-வி.ஜே.சாபு.. பாடல்கள் சினேகன்.. நெல்லைபாரதி.. ஆதிராஜன்.. நடனம் ராதிகா..கலைக்குமார்.. ஸ்டண்ட் மாஸ் மாதா..

​படத்தின் தலைப்பு மாற்றம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது,​ பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல
​இடங்களில் பட
​ப்​பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.. தமிழ்
​,​ கன்னட
​ மொழிகளில் உருவான
​’​ரணதந்திரா
​’​
​ தமிழில் ’அதர்வனம்’; என பெயரிடப்பட்டிருந்தது. இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் ’அதர்வனம்’ என்ற தலைப்பு அவ்வளவு புரியவில்லை எனவும், ’சிலந்தி பார்ட் 2’ என்பதே இப்படத்திற்கு சரியாக இருக்கும் என்று சொன்னதால் தற்போது சிலந்தி-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது
​ என்றார்​.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...