Saturday 25 March 2017

என்கிட்ட மோதாதே – திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவின் நிரந்தர ஜாம்பவான்கள் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களின் மனதை பிரதிபலிக்கும் படம் தான் என்கிட்டே மோதாதே படத்தை இயக்குனர் மிகவும் வித்தியாசமாக கையாண்டுள்ளார், ரசிகர்கள் என்றால் கொடி கட்அவுட் வைப்பவன் இல்லை புத்திசாலியும் மனிதாபிமானமும் உள்ளவர்கள் அதோடு சமுக சிந்தனை உள்ளவர்கள் என்றும் மிக தெளிவாக அழகா கூறியுள்ளார் .

படத்தில் ரசிகர்கள் மோதல் மட்டும் இல்லாமல் காதல் அரசியல் நட்பு பாசம் குடும்பம் இவை அனைத்தையும் கலந்த ஒரு கலவையாக கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த கலவை என்பதால் திகட்டவில்லை ரசிக்க வைத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் .

1988யில் நடக்கும் கதை என்று மிகவும் உன்னிப்பாக கவனித்தால் அதில் எந்த குறையும் இல்லமால் படத்தை இயக்கியுள்ளார் காட்சிகளை மிகவும் கவனிப்பாக சிகை அலங்காரம் பேக் ட்ராப் போஸ்டர்ஸ் தியேட்டர் இப்படி எல்ல்திலும் மிகவும் கவனிப்பாக இயக்கியுள்ளார் ராமுசெல்லப்பா .

1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர்.

இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர்.

அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நம்பியாரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் – சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட் வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.

பின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து, அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில் இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரஜினி ரசிகராக வரும் நடராஜ் மிகவும் எதார்த்தமாக நடித்து இருக்கிறார் ரஜினி ரசிகன் என்ன செய்வார்களோ அதை மிகவும் உள்வாங்கி நடித்துள்ளார் என்று தான் சொல்லணும் சண்டை காட்சிகலில் பிரமிப்பும்ஏற்படுத்தியுள்ளார்,அவரது ஒவ்வொரு அவரது ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் அவரது உடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக சிகரெட்டை தூக்கி போடுவது, நடை, உடை என ரஜினி ஸ்டைலில் அசத்துகிறார். குறிப்பாக தனது தலைவர் படத்தை ரிலீஸ் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நட்ராஜுடன் வரும் நபர் படத்தில் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

அடுத்து ராஜாஜி கமல் ரசிகர் ஒரு கமல் ரசிகர்கள் போலவே அமைதியாக நடித்துள்ளார் நல்ல நண்பனாக மட்டும் இல்லை நல்ல அண்ணன் என்ற நடிப்பையும் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார் .

சஞ்சித செட்டி, பார்வதி நாயார் தன் பங்கை மிகவும் சிறப்பக நடித்துள்ளனர் கொடுத்த வாய்ப்பை கோசமும் சிதறவிடாமல் பார்ப்பதுக்கு நெல்லை பெண்கள் மாதிரியே இருப்பது மேலும் ரசிக்கவைகிறது .

இப்படத்தில் ராதாரவி ஒரு மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். பயந்த சுபாவமாக வரும் இவர் தனது அடியாளின் மூலம் தான் நினைப்பதை செய்து முடிப்பதில் நின்றுள்ளார். குறிப்பாக அரசியல்வாதிக்கு ஏற்ற சாதுர்யங்களும், சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து கொள்வதிலும் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ரசிகர்களா இல்லை அரசியல்வாதிகள என்று நடராஜ் மிரட்டும் காட்சியில் ரசிகர்கள் தான் முக்கியம் என்று கழுவுற மீன் போல நழுவும் ராதாரவி நடிப்பு அருமை

ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார்.

படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களையும் கலந்த ஒரு கலவையாக திருநெல்வேலி மண் வாசனையை சிறிதும் குலைக்காமல் சிறப்பக இயக்கியுள்ளார் இயக்குனர் ராமுசெல்லப்பா ஒரு ரசிகன் நினைத்தால் அரசியல்வாதிகளை துவம்சம் செய்வோம் என்பதை சிறப்பாக செய்துள்ளார் அதோடு ரஜினி மற்றும் கமல் ரசிகர்களை மிகவும் கௌரவ படுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் ,

மொத்தத்தில் என்கிட்ட மோதாதே மிரட்டல் Rank 4/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...