Friday 24 March 2017

வைகை எக்ஸ்பிரஸ் திரைவிமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் படத்துக்கு அரங்கத்துக்கு போனால் படம் நிச்சயம் உங்களுக்கு மிக பெரிய சப்ரைஸ் காத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் படம் ஆரம்பம் ஆன முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரை செம விறுவிறுப்பு என்று தான் சொல்லணும் .சரி இந்த படத்தில் யார் யார் நடித்துள்ளனர் ,கதை வைகை எக்ஸ்பிரஸ் வேகம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் .

இந்த படத்தில் ஹீரோவாக R.K நாயகியாக நீத்து சந்திரா ,இவர்களுடன் நாசர், இனியா M.S.பாஸ்கர் ரமேஷ் கண்ணா இயக்குனர் R.K செல்வமணி ஆறுமுகம் மற்றும் பலர் நடிப்பில் தமன் இசையில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் டிவி நிருபர், இன்னொருவர் எம்.பி.சுமனின் மச்சினிச்சி, மற்றொருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா.

மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் குத்துயிரும் கொலையிருமாக கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே.வை நியமிக்கிறார் எம்.பி.சுமன். அவர் அதே பெட்டியில் பயணம் செய்யும் தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்படுகிறார். ஆனால், அவர் இந்த கொலையை செய்யவில்லை என்பது தெரிந்ததும், அந்த கூபேயில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் ஆர்.கே.

இந்த கொலைக்கான விசாரணையை வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? என்பதை எதிர்பாராத கிளைமாக்சுடன் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலையின் காரணங்களுக்கான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வேளையிலும் நமக்குள்ளே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல், எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகளிலும் இவரது ஆக்ஷன் பலே சொல்ல வைக்கிறது. இதற்கு முன் நம் பார்த்த ஆர்.கே.வுக்கும் இந்த ஆர்.கே.வுக்கும் பல வித்தியாசம் என்று தான் சொல்லணும் குறிப்பாக சண்டைகாட்சிகளில் சும்மா தெறிக்க விடுகிறார் அதேபோல் நடிப்பிலும் மிகவும் மிளிர்கிறார் சில சமயங்களில் நாம் உண்மையான போலீஸ் அதிகாரியாகவே தெரிகிறார் அந்த அளவுக்கு மிகவும் யதார்த்தமாக செய்துள்ளார்.

நீத்து சந்திரா இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அக்க ராதிகா தங்கை ஜோதிகா அக்கா வேடத்தில் கொஞ்சம் டெரராக நடித்துள்ளார் தங்கை வேடம் அதுக்கு அப்படியே எதிர் மாதிரி மிகவும் அமைதியாக பாரத நாடிய கலைஞராக நடித்துள்ளார் இந்த இரண்டு வேதத்துக்கும் நல்ல மாற்றங்களை கொடுத்து மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

எம்.பியாக வரும் சுமன், நடிகையாக வரும் இனியா, ரயில்வே போலீசாக வரும் ஜான் விஜய், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்துருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது. அதே போல் அனைவரும் அவர்களின் பங்கை உணர்ந்து நடித்து இருப்பது பாராட்டவேண்டிய விஷயம்

ஒரு ரெயிலில் நடக்கும் கொலை, அதை தொடர்ந்து நடைபெறும் விசாரணை என ஆரம்பத்தில் எடுக்கும் வேகம், கடைசிவரை குறையாமலேயே சென்றுள்ளது. இந்த கதை தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் படத்தின் முக்கிய சிறப்பம்சமே. இரண்டேகால் மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். படத்தின் டைட்டிலில் இயக்கம் என்று போடாமல் மேகிங் என்று தனது டைட்டில் கார்ட்யில் போட்டு இருப்பது பாராட்டவேண்டிய விஷயம் உண்மையில் இந்த படத்தின் மேகிங் சும்மா எக்ஸ்பிரஸ் வேகத்தைவிட அதிகம் அதேபோல எங்கும் போர் அடிக்காமல் முகம் சுளிக்காமல் படத்தை இயக்கிய விதம் அருமை என்று தான் சொல்லணும் .

இந்த படத்தின் மிக பெரிய பக்க பலம் ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கர் இயக்குனர் வேகத்துக்கு ஈடான ஒளிப்பதிவு அதே போல தமனின் பின்னணி இசை அதுவும் படத்துக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது

மொத்தத்தில் வைகை எக்ஸ்பிரஸ் செம ஸ்பீட் பயணிக்கலாம் Rank 3.5/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...