நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டம் ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் தடை தாண்டி ஓட்டம் ஒட வேண்டியிருக்கிறது. இப்படி நம் நாட்டில் பெண்கள் பல்வேறு தடைகளை, இடையூறுகளை , இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் எல்லாத் துறைகளி்லும் மேலே வர வேண்டியிருக்கிறது.
இப்போதெல்லாம் கல்வி என்றால் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண் பெறுவது தொடர்ந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு ,சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு பெண் தன் கல்வியில் சாதிக்கத் தடைகளைத் தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் படம் தான் "இலை'.
இப்படத்தை பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ் , கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம். காவ்யா நடித்துள்ளார்கள்.
இது 1991ல் நடக்கும் கதை. அந்த ஊரில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது.
அந்த ஊரில் வசிக்கும் நாயகிக்கோ படித்து வாழ்வில் உயர வேண்டும் என்று கனவு. ஆனால் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? என்று பெற்ற தாய் மட்டுமல்ல அவளை மணந்து கொள்ளக் காத்திருக்கும் தாய் மாமனும் குறுக்கே நிற்கிறார்கள்.
ஆனால் நாயகியின் அப்பாவோ மகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.
நாயகிக்கு வருகிற தடைகள் அவள் தேர்வு எழுத முடியாத அளவுக்குக் குறுக்கே நிற்கின்றன . தடைகளை மீறி அவள் தேர்வு எழுதினாளா இல்லையா என்பதே கதை. இக்கதையில் ஒரு முழு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அப்படி ஒரு வணிக ரீதியிலான முழுப் படமாக உருவாகியுள்ளது தான் 'இலை' .
நல்லதொரு கதையுடன் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் இணைந்து இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி, சாலக்குடி, திண்டுக்கல் , தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் அஞ்சல் , இசை - விஷ்ணு வி.திவா கரன், வசனம் - ஆர்.வேலுமணி, கலை - ஜைபின் ஜெஸ்மஸ் ,எடிட்டிங் - டிஜோ ஜோசப், நிர்வாகத் தயாரிப்பு _ ஷோபன் குமார் , தயாரிப்பு மேற்பார்வை - உன்னி கிருஷ்ணன் .தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர் நேஷனல் .

0 comments:
Post a Comment