நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் நகர் நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிபிட்டுள்ளதாவது
நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் “பொண்ணுக்கு தங்கமனசு “ என்ற திரைபடத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார்.
நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் “பொண்ணுக்கு தங்கமனசு “ என்ற திரைபடத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் கலைச்சேவையாற்றி வருகிறார்.
தொடர்ந்து அக்னிநடசத்திரம், கிழக்கு சீமையிலே, நாட்டாமை, போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார்.
அவரது கலை பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நகர் நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதை அறிந்து நங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது கலைபயனத்திற்க்கு தலைவணங்கி தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
0 comments:
Post a Comment