Saturday 18 March 2017

புருஸ்லீ – திரைவிமர்சனம்

ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளனர் அதுபோல ஜி.வி. பிரகாஷ் தனகென ஒரு பாணியை ஆரம்பத்தில் இருந்து வைத்துகொண்டு வருகிறார் நமக்கு என்ன வரும் நாம் எதை செய்தால் அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று புரிந்து கொண்டு நடித்து கொண்டு அதில் தொடர் வெற்றியையும் பெற்று வருபவர் அதை தான் இந்த படத்திலும் செய்து வந்துள்ளார் என்று சொல்லணும் . 

ஹீரோ என்றால் டான்ஸ் ஆடனும் சண்டை போடணும் பறக்கணும் இப்படி ரூல்ஸ் இல்லை கதைக்கு என்ன தேவையோ அதை செய்தால் வெற்றி உண்டு என்பதற்கு ஒரு அடையாளம் தான் சமீபத்தில் வெளியான குற்றம் 23, ஜி.வி. பிரகாஷ் செய்துவருகிறார் தேவை இல்லாமல் சண்டைகள் பஞ்ச வசனங்கள் எதுவும் இல்லாமல் தனக்கு வரும் காமெடியை வைத்து படம் பண்ணுவோ என்று மிகவும் தெளிவாக செய்து வருகிறார்.

இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் என்றால் அது புருஸ்லீ இதில் ஜி.வி.பிரகாஷ் கீர்த்தி கர்பந்தா, ராமதாஸ் , பால சரவணன் , மொட்டை ராஜேந்திரன் , மற்றும் பலர் நடிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசையில் ஷங்கர் பி வி ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் புருஸ்லீ சரி வாங்க படத்தை பற்றி பார்ப்போம்

நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார்.

இந்நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிடுகின்றனர்.

இதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதே மீதிக்கதை.

ஜி.வி. பிரகாஷ் எப்பவும் போல ஒரே ஸ்டைல் நடிப்பு ஆனால் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது காமெடி இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நன்றாக இருந்து இருக்கும் இதற்க்கு முன் வந்த படங்களுக்கும் இந்த படத்துக்கும் பெரிய மாற்றங்கள் இல்லை இனி வரும் படங்களை பார்த்து கொள்ளுங்கள் ஆனால் உங்கள் ரசிகர்கள் இதை தானே ரசிகிரார்கள் காரணம் போன படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது

அறிமுக நாயகி கீர்த்தி கர்பந்தா முதல் படம் போல இல்லாமல் நல்ல துரு துறுன்னு நடிச்சு இருக்காங்க காதல் காட்சிகளில் கொஞ்சம் நெருக்கமாக நடிச்சு இருப்பது படத்துக்கு மேலும் பலம் என்று தான் சொல்லணும். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் இவரை ஒரு வளம் வருவார்.

படத்தின் மிக பெரிய பலம் பாலா சரவணன் இவரின் காமெடி மிகவும் ரசிக்கும் படி செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் படத்தில் முக்கிய பாத்திரம் மிக தெளிவாக செய்துள்ளார் இவரின் காமெடி டைம் சென்ஸ் மிக அற்புதம் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்று தன் சொல்லணும்.

ராமதாஸ் (முனிஷ்காந்த்) படத்துக்கு இன்னொரு பலம் மிக சிறந்த நடிகர் தோற்றத்துக்கும் நடிப்புக்கும் சமந்தம் இல்லாதவர் என்று தான் சொல்லணும் அடேகப்பா என்ன ஒரு நடிகன் காமெடி கலந்த வில்லன் இவற்றின் மேனரிசம் எல்லாம் திரையரங்கத்துக்கு சென்று பார்த்தால் தான் ரசிக்கமுடியும் மிக சிறந்த ஒரு நடிகன் .

படத்தின் இயக்குனர் . உலக புகழ் நடிகர் மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த பைட்டர் அவரின் பேரை வைத்து படம் ஒரு மிக பெரிய ஆக்சன் படம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் இது ஒரு காமெடி படம் இரண்டு மணி நேரம் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார் . பாண்டிராஜ் உதவி இயக்குனர் என்று எதிர் பார்ப்பு இல்லாமல் அரங்கத்துக்குள் செல்லுங்க ரசிக்கலாம்

படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்களும் சரி பின்னணி இசையும் அருமையாக செய்துள்ளார் தன் படம் என்பதால் மிகவும் மேனகெடுகிறார் என்று தான் தோன்றுகிறது .

மொத்தத்தில் புருஸ்லீ கொஞ்சம் வேகம் குறைந்தவன்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...