Wednesday 15 March 2017

சிபிராஜின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கிலா விமல் நடிக்கிறார்

'கிடாரி' படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், மனதை கவரும் பாவனைகளாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்துச் சென்ற நிக்கிலா விமல், தற்போது சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் V.Z துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றிய வினோத் இந்த திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்தை 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய் கே செல்லையா தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. 


"நான் முன்பு நடித்த படங்கள் மூலம் என்னை ஒரு கிராமத்து பெண்ணாக தான் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் முதல் முறையாக நகர கலாச்சாரத்தில் வாழ கூடிய பெண் கதாபாத்திரத்தில் என்னை அவர்கள் இந்த படம் மூலம் காண்பார்கள். ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷன் கலைஞர்களாக நானும், சிபிராஜும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றோம். சமூதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கின்றது" என்று உற்சாகமாக கூறுகிறார் நிக்கிலா விமல். விரைவில் இந்த படக்குழுவினர் தங்கள் படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரிலும், அதனை தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...