Monday 27 March 2017

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் செய்த மரியாதை - மறைந்த இயக்குநர் செய்யாறு ரவி புகைப்பட திறப்பு நிகழ்ச்சி

மறைந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் செய்யாறு ரவியின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.


சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி,


பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் சங்க தலைவர் நாசர், சின்னத்திரை இயக்குநர்கள்


சங்க தலைவர் தளபதி, சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் சிவசீனிவாசன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.


நாசர் பேசும் போது, ”மிகவும் சங்கடமான ஒரு சூழல், என்னோடு படித்தவன், என்னைவிட இனியவன், என்னைவிட இளையவன், என்னை விட மிக அறும்பாடு


படுபவன். அவனுக்குள் ஒரு போராளி இருக்கிறான். அவனுடைய மறைவு செய்தி என் காதுக்கு கிட்டியபோது சற்றே அதிர்ந்துபோனேன். எல்லோர்க்கும்


தோன்றுவதை போல, என்னையா இது என்னை விட சின்ன பையன் தானே என்ற அதிர்ச்சி. இங்கே நீங்க எல்லோரும் வந்திருப்பதற்கு கடமை காரணமல்ல,


அவன் மீது உள்ள அன்பின் காரணமாக வந்திருக்கிறீர்கள். நானும் அதற்காக தான் வந்திருக்கிறேன். அவனுடைய சிறித்த முகம், யார் கிட்ட என்ன திட்டு


வாங்கினாலும் சரி, மன அழுத்தம் இருந்தாலும் சரி, சிரிச்சிட்டே இருக்கும் குணம். அவன் சிறந்த மனிதனாக இருந்தான். சிறந்த படைப்பாளியாக இருந்தான்.


என்பதற்கு ஒரே ஒரு சான்று, அவன் தன்னுடைய கலை பயணத்தை ஆரம்பித்தது முதல் இதுவரை தியாகராஜன் சாரோடு பயணித்து வந்தான். தியாகராஜன் சார்


கடுமையான சட்ட திட்டங்களை வைத்திருப்பவர், அதை சரி பார்கிறவர். அவர் சாதாரணமாக ஒரு இயக்குநரை அங்கீகரித்தது கிடையாது. ஆனால், அவர்


எப்போது பேசினாலும், அவன் எப்படி வேலை செய்கிறான், என்பதை பற்றி தவறாம சொல்லுவார். அந்த ஒன்றே சான்று, அவன் ஒரு தேர்ந்த படைப்பாளியாக,


நல்ல மனிதராக இருந்தான் என்பதற்கு.


அவனுடைய காலத்தை அவன் முடித்துக்கொண்டாலும், அவன் வாழ்ந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார், யார் யார்க்கு உதவி செய்திருக்கிறார், என்று


பார்க்கும் போது நூறு ஆண்டு வாழ்க்கையை முடித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். இப்படிபட்ட ஒரு எந்திரக்காலத்தில் கல்லம் கபடம் அற்ற ஒரு சிரித்த


முகத்தை பார்ப்பது மிக மிக அரிதாக இருக்கிறது. நானே ஒரு இடத்திற்கு சென்றால் சிரித்த முகத்தில் இருக்க முயற்சி செய்கிறேன், ஆனால் முடியவில்லை.


அவரை இழந்ட அவருடைய மனைவியை விட அதிகமான இழப்பு அவருடன் நெருங்கி பழகின நண்பர்களுக்கு தான். அவர் ஒரு நாள் பழகினாலும், ஒரு


வருஷம் பழகினாலும், இல்ல பல வருஷம் பழகினாலும் உங்க கிட்ட செலுத்துன அன்பை காட்டிலும் அதிகமாக எங்களுக்கு கொடுத்திருக்கிறார். இழப்பு


எங்களுக்குத்தான். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வது, உங்களோடு சேர்ந்து எப்படி பகிர்ந்துக்கொள்வது என்பது உண்மையாக எங்களுக்கு குழப்பமாக


இருக்கிறது. ஆனால், அவன் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து போய் இருக்கிறான். ஒரு நூறாண்டு காலம் வாழ்க்கையை ஐம்பது சொட்ச காலத்தில்


வாழ்ந்து சென்றிருக்கிறார். அவரது நற்குணத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அவனை இழந்த அனைத்து நெஞ்சங்களோடு, எனது நெஞ்சமும் இணைகிறது, நன்றி வணக்கம்.” என்றார்.






சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி பேசும் போது,


”நண்பர் செய்யாறு ரவி உதவி செயக்கூடிய குணம் கொண்டவர். எப்போதும் சிறித்த முகத்தோடு இருப்பார், என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
எல்லோருடையும் பொதுவாக சொல்வது என்னவென்றால், ஒரு சங்கத்தின் தலைவர், செயலாளர் ஒரு மாட்டு வண்டியோட சக்கரம் போல, ஏன் என்றால், ஒரு


சக்கரம் சிறியதாக இருந்தால், அந்த வண்டி அங்கேயே தான் இருக்கும். அதேபோல ஒரு சக்கரம் பலவீனமாக இருந்தால் அந்த வண்டி எங்காயவது


விழுந்துவிடும். ரெண்டு சக்கரமும் ஒரே திசையில், ஒரே மாதிரி பயணிக்கும் போது தான் அந்த வண்டி சரியான முறையில் பயணிக்கும். அந்த வகையில்


எனக்கு உற்ற துணையாக எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்தவர் செய்யாறு ரவி சார். அந்த வகையில் எங்களது சங்கத்திற்கு அவரது இழப்பு மிகப்பெரிய


பாதிப்பு. அப்படி இருந்த சக்கரம் பாதிப்போ இல்ல, பழுதோ அடையவில்லை, இந்த உலகத்தை விட்டே காணாமல் போய்விட்டது. இதை நினைத்துக் கூட பார்க்க


முடியவில்லை. அதாவது அவரது இறப்புக்கு ஒரு நொடி முன்பு கூட, அவருக்கோ அவர் கூட இருந்தவங்களுக்கோ யாருக்கும் தெரியவில்லை. ஒரு வகையில


தான் இயக்குநராக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு, ஷாட் வைத்திருக்கும்போதே இறந்ததை அவரது ஆத்மா சந்தோஷமாக தான் எடுத்துக்


கொண்டிருக்கோம்.


அவருடன் நிறைய விஷயங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களோட சங்கம் பொருளாதர நிலையில் மோசமாக இருந்தது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை


வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அதேபோல் நல்ல மனம் கொண்ட நிறைய பேருடன் பழகிக்கொண்டிருந்தவர் அவர்


தான். அதனால, அவர் அடிக்கடி, நாம ஜகத்ரட்சகன் சாரை சந்திப்போம், வீரமணி ஐயாவை சந்திப்போம், நம்ம சங்கத்துக்காக அவங்க கிட்ட உதவி கேட்கலாம்


என்று சொல்லிட்டு இருப்பாறு. ஆனால் அதற்குள் அவர் இறந்தது, எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அதனால், அவர் சார்பாக நான் இங்கே கோரிக்கை


வைக்கிறேன். மத்த நிறுவனங்கள், நிறைய மருத்துவமனைகள் எங்களுக்கு ரொம்ப ஏழையா, கஷ்ட்டப்படுகிற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு படிக்க உதவி


செய்கிறார்கள். இலவசமான கல்லூரி சீட், இலவச சிகிச்சை போன்றவற்றை வழங்குகிறார்கள். அந்த வகையில் நீங்க எங்க சங்கத்திற்கு செய்யாறு ரவி


நினைவாக எது செய்தாலும் அவர் வாங்கிக்கொடுத்ததாக அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம் நன்றி.” என்றார்.






இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,


“செய்யாறு ரவி செய்யாறில் பிறந்திருந்தலும், அவங்க குடும்பத்தாரிடம் இருந்ததை விட என் கூட ரொம்ப நாள் இருந்தார். நிறைய நேரம் எனக்காக அவர்


உழைத்தவர். நான் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரா வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு பெரிய காரணம் ரவி தான். ஒரு உதவி இயக்குநர்


சரியானவனாக இல்லாமல் இருந்தால் ஒரு இயக்குநர் வளரவே முடியாது. எனக்கு அவன் சிஷ்யனாக இருந்தாலும், எனக்கு ஒரு தகப்பன். ரவி தன்னோட


நலனுக்காக மட்டுமே இருக்க மாட்டான். முதல் படம் என்னுடன் பணிபுரிந்தான். துறு துறு என்று இருப்பான், நாளு ஆள் வேலையை அவன் மட்டுமே சுமந்து


செய்வான். யாராவது தப்பு செஞ்சாலும், விடுங்க சார் அவன் போக போக சரியாயிடுவான், என்று சிரிச்சிடே சொல்லி நம்மை சமாதானப்படுத்துவான். பிறகு


அவங்க கிட்ட போய், பார்த்து செய்ங்க, இயக்குநர் முதல் படம் செய்கிறார், அவரை டென்ஷன் பண்ண வேண்டாம், என்று சொல்லி அனைவருக்கும் ஒரு


பாலமாக இருப்பான். பெரிய பெரிய தலைவர்களுக்குத்தான் இதுபோன்ற குணம் இருக்கும். ஒரு பிரச்சினை என்று வரும்போது, செல்வமணியாகட்டும்,


விக்ரமனாகட்டும், நான் ஆகட்டும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பேசுவான், “சார் எல்லோரும் நல்லவங்களா தானே சார் இருக்கீங்க, உங்களபத்தி


எல்லோரும் நல்லாதானே சொல்றாங்க பிறகு ஏன் சார் சண்டை போட்டுக்கிறீங்க விடுங்க சார்” என்று சொல்லி சமாதானப்படுத்துவான். இந்த மாதிரி ஒரு


மனுஷன பார்க்குறது ரொம்ப கடினம்.


செய்யாறு ரவி என் கிட்ட சேர்த்துவிட்ட உதவியாளர் பலரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். சென்சார் குழுவில் இருந்த பக்கிரிசாமியை கூட


என்னிடம் அவன் தான் சேர்த்துவிட்டான். அவன் யாரை அழைத்து வந்தாலும் நான் சேர்த்துக்கொள்வேன். ஏன் என்றால் அவன் நல்லது தான் செய்வான். அதற்கு


பிறகு தரணியை என்னிடம் சேர்த்துவிட்டதும் அவன் தான். தரணி என்னிடம் சேர்ந்து முதல் நாள் படப்பிடிப்பு, ஆக்‌ஷன் காட்சி படமாக்கிவிட்டு முடித்த பிறகு


பிரேக்கில் சாப்பிட சென்றோம். அப்போது ஒரே சத்தம், என்ன என்று கேட்டால், பைட்டர்கள் குதித்தது போல தரணி மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாக


சொன்னார்கள். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். ஆனால், அந்த விஷயமே எனக்கு தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் ரவி.


காரணம், விஷயம் தெரிந்தால் எங்கே நான் தரணியை வேலையில் இருந்து நீக்கிடுவோனோ என்ற அச்சத்தில், அது ஒன்னும் இல்ல சார், லேசான காயம் தான்,


என்று கூறி விஷயத்தை சமாளித்தார். இப்படித்தான் தனது நண்பர்களுக்காக பல உதவிகளை அவர் எப்போதும் செய்துக் கொண்டிருப்பார்.


யாரச்சும் நண்பர்கள் என்னை பற்றி தவறாக பேசினால், அவர் கிட்ட சண்டைபோட்டு, என்னைப் பற்றி அவர்களிடம் விளக்கி சொல்லி அவர்களை


சமானதப்படுத்திவிட்டு தான் வருவார். அந்த மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்தோடு இருப்பார்.


இறக்கும் போதும் சிறித்தபடி தான் அவர் இறந்திருப்பார். அவரது உடல் வைக்கும் போது கூட வாயை மூட முடியவில்லை. அந்த அதிர்ச்சியை தான் என்னால


தாங்க முடியல. கடந்த 20 நாட்களுக்கு முன்பு எனது தாயார் மரணமடைந்துவிட்ட செய்தியை எனது சகோதரர் எனக்கு சொன்னவுடன், நான் முதலில் சொன்னது


ரவிக்கு தான். எனக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள், நண்பர்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் எனக்கு முதலில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது


ரவிக்குதான். அப்போது நான் சொன்ன உடன் சார் வரட்டுமா? என்று கேட்டான், நான் உன் வேலையை பாருடா, தேவை பட்டா நான் கூப்பிடுறன், என்று


சொல்லிவிட்டு 6.15 மணி பிலைட்டில் புறப்பட தயாரானேன். அப்போது 5 மணிக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்துட்டான். தனியா


இயக்குநராகி படம் இயக்கிவிட்டான், பல சீரியல்கள் இயக்கி கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் என்னை எல்லாமுமாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.


நான் என்றால் அவனுக்கு உயிர். அவங்க அப்பாவுக்கு அப்புறம் நான் தான், அதில எந்த மாற்றமும் கிடையாது.


சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல இதயக்கோளாறு ஏற்பட்ட போது மருத்துவமனையில் அனுமதித்து அதை சரிசெய்துவிட்டோம். தற்போடு அதை அப்படியே


கவனிக்காமல் விட்டுட்டாறோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. என் தயார் மறைவின் 16 ம் நாள் முடிச்சுட்டு வர்றேன். 17 வயது நாள் இவன் என்னை


கூப்பிடுறான் நான் போய்ட்டேன் என் வீட்டுக்கு வாங்க என்று. தாயையும், தனனையும் இழந்த சோகம் ஒரே நாளில் வந்தது என்றால் அது எனக்கு மட்டும் தான்.


நான் அவ்வளவு நேசித்தேன் செய்யாறு ரவியை. இன்னைக்கு வரைக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திராவிட கழகத்தை பின்பற்றுகிறது என்றால் அது


செய்யாறு ரவியின் தந்தை குடும்பம் தான். அப்படி ஒரு குடும்பத்தை பார்க்கவே முடியாது. அவங்க அப்பா ஜனாதிபதி விருது பெற்றவர், ஆனால் அதை


எப்போதும் ரவி காட்டிக்கவே மாட்டான். பொண்ணு பார்க்க போவோம். ஒரு வீட்டில் பெண் கொடுக்க தயங்குகிறார்கள். சினிமா வேலையாச்சே. அப்போ, நானும்


என் மனைவியும் பெண்ணின் பெற்றோர்களை தனியாக அழைத்து, சார் விரைவில் ரவி இயக்குநராகி விடுவான். என்னை விட பெரிய இயக்குநராவதற்கான


அறிவுத்திறன் பெற்றவன், நிச்சயமாக நீங்க அவன நம்பி பெண் கொடுக்கலாம் என்று சொல்றோம். ஒரளவு சமானதப்படுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.


அப்புறம் எனக்கு டென்ஷன் இவன் இயக்குநராகிடுவான் என்று சொல்லிட்டோமே, பெண்ணை கொடுத்துட்டாங்க, என்று. ஆனால், அதை காப்பாற்றினான். ஆனந்தி


பிலிம்ஸ்ல ஒரு படம் பண்ணான். நம்ப சொன்னது நிறைவேறியது என்று எனக்கு சந்தோஷம். பிறகு சத்யஜோதியில் அரிச்சந்திரா படம் பண்ணான். பிறகு


ஏகப்பட்ட சீரியல்கள் இயக்கினான். கடைசி நாட்களில் 40 நாட்களுக்கு முன்பு, இலங்கைக்காக ஒரு படம் பண்ணியிருக்கேன். கமல் சார் நடிச்ச பாபநாஷம்


படத்தை பண்ணியிருக்கேன், நீங்க பார்க்கணும் என்று சொன்னான். சரி நானும், என் மனைவியும் சென்று அந்த படத்தை பார்த்தோம். அந்த படத்தை பார்த்து


நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பல வெளிநாட்டு படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த படம் பாபநாசம் படத்தைக் காட்டிலும் நூறு மடங்கு நன்றாக


இருந்தது. இது தான் உண்மை. அந்த படத்தை பார்த்ததும் முதல் முறையாக ரவி மீது எனக்கு பொறாமை வந்தது. என்னடா இப்படி ஒரு டைரக்‌ஷன்


பண்ணியிருக்க, முகம் தெரியாத நடிகர்களை வைத்து, அவங்க கிட்ட பிரமாதமாக வேலை வாங்கி, அசத்தியிருந்தான். நான் படம் பார்த்து மிரண்டுட்டேன். நான்


எதிர்ப்பாக்கல. அந்த படத்தை நீங்க ஒரு முறை பார்க்கணும். அப்படி ஒரு படம். நாம் முயற்சி செய்து அந்த படத்தை போடலாம். இந்த மாதம் தான் அந்த படம்


இலங்கையில ரிலீஸ் ஆகப்போகிறது. அந்த படத்தால சர்வதேச அளவில் விருது பெற வேண்டிய ரவி, அதற்கு முன்பாகவே சென்றுவிட்டது நமக்கு பெரும்


அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.


இவ்வளவு சீக்கிரமாக போகவேண்டியதால் என்னவோ தனது வாழ்க்கையை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறான். அனைவராலும் நேசிக்கப்பட்டு, அந்த


புன்சிறிப்பை நாம் திரும்ப பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் அதை மறக்க முடியாது. செய்யாறு ரவி, இன்னும் இருக்கிறான், என்னோடு இருக்கிறான், எனது


உள்ளத்தில் இருக்கிறான். ஏன் என்றால், ஒவ்வொரு நண்பர்களையும் விட்டுக்கொடுக்க மாட்டான், அத்தகைய நண்பர்களின் நினைவுகளில்


வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். அந்த குடும்பத்திற்கு நாம் அனைவரும் இருக்கிறோம், ஒன்னும் பிரச்சினை இல்லை. அவனது மனைவி ஜெயந்தியிடம்


தன்னம்பிக்கை இருக்கிறது. அவனது மனைவியிடம் தைரியத்தை வளர்த்திருக்கிறான். அவங்க குடும்பத்தை தனியாக நின்று காப்பாற்றும் அளவுக்கு தைரியம்


படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவன் எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருப்பான், நம்மையும் ஜெயிக்க வைப்பான். அவனுடைய நினைவுகளில்


வாழும் உதயகுமார் நான்.” என்று தெரிவித்தார்.








முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசும்போது,


“தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக, சங்க செயலாளர் செய்யாறு ரவி படத்திறப்பு நிகழ்ச்சி, இங்கே ஏற்கனவே உரையாற்றி


அமர்ந்திருக்கிறவர்கள், உரையாற்றப் போகிறவர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.


ஆர்.வி.உதயகுமார் அவர்கள் மொத்தத்தையும் இதயத்தை பிழிந்து சார் எடுத்து பேசி அமர்ந்திருக்கிறார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் நம்


உயிரோடும், உணர்வோடும் கலந்திருக்கும் வகையில் அவர் பேசினார். நான் எதை சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ரவி என்னுடைய பிள்ளை.


ரவி கடந்த 25 ஆண்டு காலமாக என்னுடன் ஊனோடும், உயிரோடும் கலந்திருந்தவன். எங்களுடைய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் தன்னை முழுமையாக


அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெருந்தகை. அவனைப்போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை, பழகியதும் இல்லை.


எப்போது பார்த்தாலும் புன்சிரிப்பு ஒரு புறம். நமக்கு ஏற்படுகிற இன்னல்களை கூட, அதை கலைகிற வகையிலே, மயில் தோகையில் தடவி விடுவதை போல,


நமது நெஞ்சங்களை இதமாக தடவி விட்டு அதில் இருந்து நாம் மீண்டு வர உறுதுணையாக இருப்பான். எனக்கு வாரத்திற்கு ஒரு சோதனை வரும், வாரத்திற்கு


ஒரு பிரச்சினை வரும், அப்போது என்னுடன் பக்கபலமாக இருப்பான். அவனைப் போல எனது பிள்ளைகள் கூட என்னோடு இருந்ததில்லை. எனது உற்றார்


உறவினர்கள் கூட இருந்ததில்லை, அவன் மட்டும் தான் இருந்தான். அது எந்த பிறவியில் ஏற்பட்ட பந்தம் என்று தெரியவில்லை.


வாய் திறந்து எதையும் கேட்க மாட்டான். இது வேண்டும் அது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. ஏம்பா படம் எதாவது பண்ணனுமா சொல்றா உதவி


செய்றேன் என்று சொன்னாலும், எதுவும் வேண்டாங்க. நீங்க சந்தோஷமாக இருக்கனும் மகிழ்ச்சியா இருக்கனும், நீங்க நல்லா இருக்கனும், என்று சொல்லி


வேண்டாம் வேண்டாம் என்று சொல்வான். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது என்னை பார்த்துவிட்டுதான் போவான். அது என்னாச்சு, இந்த


பிரச்சினை என்று சொன்னார்கள் சரியாயிடுச்சா, இன்கம்டாக்ஸ் ரைடு என்று சொன்னார்கள் என்னாச்சு, நான் யாரையாவது பார்க்க வேண்டுமா? என்று கேட்பான்.


எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திலையும் அப்படித்தான் இருந்தான். எங்கள் அண்ணன் மனதில் இடம் பிடித்துப்பது அவ்வளவு சுலபமில்லை.


எம்.ஜி.ஆர்-யே தராசில் வைத்து பார்ப்பவர் எங்கள் அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள், ஆனால் ரவியை அண்ணன் ஆர்.எம்.வீ ஏற்றுக்கொண்டவர். அவனது


திறமையை போற்றியிருக்கிறார். அந்த திறமையை எங்கிருந்து கற்றுக்கொண்டான் என்று தெரியவில்லை. ஒரு கிராமத்து கிளி, ஒரு கிராமத்து பறவை, ஒரு


சாதாரணமான கிராமத்தில் பிறந்தவன். அந்த கிராமத்தில் இருந்து வந்து நமக்கு இத்தனை வண்ணங்களை கொடுத்திருக்கிறான். அவன் ஒரு சுயம்பு, அவனது


இழப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.


ஓர் திருவிழாவுக்காக காப்பு கட்டியிருந்தேன். அப்போது அவனது இறப்பு செய்தி கேட்டு பதறிப்போய் வந்தேன். எனக்காக காத்திருந்தார்கள், வந்ததும்


சடங்குகளை ஆரம்பிக்க சொன்னேன், இல்ல அந்த பழக்கம் இல்ல என்று சொன்னார்கள். ஏம்பா நாம வன்னியர் தானே, நமக்கு அந்த சடங்குகள் இருக்கிறது


என்றேன், இல்ல நாங்க தி.க என்று சொன்னார்கள். ஒரு சின்ன சடங்கு கூட கிடையாது. இங்கே தமையன் தலைவர் அமர்ந்திருக்கிறார், எந்த அளவுக்கு இந்த


கொள்கைகளில் ஊறியிருக்கிறீர்கள் என்று நான் மெய்சிலிர்த்து போனேன். உலத்துல எங்கேயும் பார்க்க முடியாது. என்ன மேடையில ஏத்தினிங்கனா, கோயில்


இடிக்க பேசுவேன், கோயில் கட்ட பேசுவேன், இப்படி தானே நாம வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். சரி சுடுகாட்டுக்கு போனோம் அங்கே முகத்த மூடுவதற்கு


முன்னால் வாய்க்கரிசி போடனும், அப்பாவ பார்த்து வாய்க்கரிசி போடலாம்னு சொல்றேன், அதெல்லாம் வேண்டாம்பா, நீங்க சீக்கிரம் முடிங்கடா, என்று அப்பா


சொல்றாரு. எந்த அளவுக்கு அந்த கொள்கையில் அந்த குடும்பம் ஊறிபோய் இருக்கிறது பாருங்கள். அந்த மன தைரியத்தை பாருங்க. அந்த ஊரில் நெருப்பு


மிதிப்பார்கள். சாமி இல்லை என்று சொல்கிறீர்களே பிறகு ஏன் நெருப்பு மிதிக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன், அதற்கு சாமி இல்ல சாமி இல்ல, என்று சொல்லி


அந்த ஊர் மக்கள் நெருப்பு மிதிப்பார்களாம், அப்படி ஒரு திடமான கொள்ளைகளை கொண்ட கிராமத்தில் இருந்து வந்த பறவை தான் நம்ம ரவி.


அதானலதான் அவனுக்கு இவ்வளவு திறமை வந்ததோ. ஒரு வன்னியர் சமூகம், பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அது அனைவருக்கும் தெரியும். வாழ்க்கையில


மிக மிக பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவன். அவன் சினிமாவில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறான். ஒரு பூவுக்கு பூக்க மட்டும் தான் தெரியும்,


மின்னலுக்கு மின்ன மட்டும் தான் தெரியும், இவனுக்கு மட்டும் தான் அனைத்தும் தெரிந்திருந்தது இந்த கலியுகத்தில். அனைத்து பரிமாணத்தையும் தன்னிடம்


வைத்துக் கொண்டிருந்தான், அனைத்து பரிமாணத்திற்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டவன். எனக்கு சத்யஜோதி பிலிம்ஸும், சத்யா மூவிஸும் சொந்த


நிறுவனம் போல, என்னிடம் வந்து இப்படி சொல்லுங்க, என்று சொல்லவே மாட்டான். நானே எதாவது சொல்லட்டுமடா, என்று கேட்டாளும் கூட, அதெல்லாம்


ஒன்னும் வேணாம், என்று தான் சொல்லுவான். அந்த அளவுக்கு தன்னுடைய திறமை மீது மட்டுமே நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் உயர்ந்தவன் நம்ம ரவி.


ரவி இப்போது நம் முன் படமாக இருக்கிறான் என்று சொல்ல முடியாது, அவன் நமக்கு பெரிய பாடம். அப்படி பாடமாக இருந்தவன் இன்னும் நூறு ஆண்டு


வாழ்ந்திருக்க வேண்டும். மத்தவங்கள உடம்பை பாத்துக்குங்க என்று அடிக்கடி சொல்வான். என் கூடவே இருப்பான். கோவில் நிகழ்வுகளில் என்னுடன்


கலந்துக்கொள்வான் ஆனா பொட்டு வைக்க மாட்டான், நான், எனது வீட்டில் கொடுத்தாலும் வச்சிக்க மாட்டான், எனக்கு கூட தெரியாது இவ்வளவு பைத்தியமாக


இருப்பான் என்று. கொண்ட கொள்கையில் திடமாக இருந்த ஒரு பெருந்தகை. அவனது படத்தை திறப்பதற்கு எனக்கு சக்த்தியில்லை. நான் நேரம் கழித்து


வந்ததற்கு அது ஒரு காரணம். அவன் இறந்துவிட்டான் என்று இன்றைக்கும் என்னால் நினைக்க முடியவில்லை. என் மேலே அவ்வளவு பாசம், அப்பாவுக்கு 85


வயது, அண்ணே நீங்க ஊருக்கு வரணும், அப்பாவ பாக்கணும் என்று சொல்வான். அதேபோல் அப்பாவுக்கும் என் மீது பாசம். அந்த இறப்பில் கூட, அந்த ஊர


பத்தியும், அந்த தொகுதி பத்தியும், மக்கள பத்தியும் தான் பேசுகிறார். அப்படி கொள்கை கோட்பாடுகளை கொண்டுள்ள தமிழர் தலைவர் அவர்களே நீங்க


இன்னும் நூறாண்டு வாழ வேண்டும். நீங்க வாழ்ந்தால் தான், நாங்க எல்லாம் முட்டிக்காலுக்கு மேல வேட்டி கட்ட முடியும். நான் எல்லா இடத்திலையும்


சொல்வேன், தந்தை பெரியார் இல்லை என்றால், முட்டிக்காலுக்கு கீழே நாம வேட்டி கட்டி இருக்க முடியாது. அந்த கொள்கைகளை இவ்வளவு சின்ன


கிராமத்தில் கூட இவ்வளவு தீவிரமாக பாய்ச்சி இருக்கிறீர்களே அதை நினைத்து வியந்து போயிருக்கிறேன். எப்படி உங்களை எல்லாம் வணங்குவது என்று


எனக்கு தெரியவில்லை.


ரவி குடும்பத்த பத்தி யாரும் கவலை படாதிங்க, நான் இருக்கிறேன், நான் பாத்துக்கிறேன். அதேபோல இந்த சின்னத்திரை பற்றி சொன்னார்கள், ரொம்ப பாவமாக


இருக்கிறது. கல்லூரி பற்றி சொன்னார்கள், யார் யாருக்கோ கொடுக்குறோம், உங்களுக்கு கொடுக்கிறது பெரிய விஷயமே இல்லை. சினிமா எடுத்துடலாம்,


ஆனால் தினம் தினம் சினிமா பார்க்க முடியும் என்று சொல்வது சின்னத்திரையினால் மட்டும் தான். சின்னத்திரை போல கடுமையான துறை எதுவுமே இல்லை.


தினம் தினம் சிரிக்க வைக்கிறீர்கள், தினம் தினம் அழ வைக்கிறீர்கள். நீங்க எப்போதுமானாலும் வாங்க, உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நான்


காத்திருப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி, இந்த இரங்கல் உரையை எப்படி முடிப்பது என்பது எனக்கு தெரியவில்லை. வார்த்தைகள் எனக்கு வரவில்லை.


ஒரு மாமனிதன், என்னோடு வாழ்ந்தவன், என் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான், நன்றி வணக்கம்.” என்று தெரிவித்தார்.








திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது,


”நம்முடைய பெருமைக்குரிய கெஜத் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார். அவர் நமக்கு படமாக அல்ல, பாடமாகவும் திகழ்கிறார் என்று. ஒரு பெரிய


கொடுமை என்னவென்றால் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி ஒரு சொல்லை பயன்படுத்துவார், இதுபோல எதிர்பாரத ஒரு சம்பவம், அதிர்ச்சியளிக்க கூடிய


சம்பவம் நடந்தால், இயற்கை கோணல் புத்தி என்று சொல்வார். ஒரு மிகப்பெரிய சாதனையாளராக, இன்னும் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த இருந்த ஒரு


சகோதரனை நாம் இன்றைக்கு இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கு மிகப்பெரிய மன சங்கடம், மன வேதனை என்னவென்று சொன்னால்,


அடிக்கடி அவருடன் பழகிய நண்பர்கள், தோழர்கள் சொன்னார்கள். அதேபோல், ஜெகட் அவர்கள் சொன்னது போல, செய்யாறு ரவி குடும்பம் திராவிட இழக்க


குடும்பம், ஒரு கொள்ளை குடும்பம். பெரியாரின் இந்த கொள்கைகள் அந்த சிறிய கிராமத்தில் இந்த அளவுக்கு வீரியமாக இருந்திருக்கிறது. திருமண வீட்டில்


கூட நமது கொள்ளைகளை நிலைநாட்டி விடலாம். ஆனால், துக்க வீடுகளில் நிலைநாட்டுவது என்பது ரொம்ப கடினம். யாராவது ஒருவன் ஆரம்பித்து விடுவான்,


அதை யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், செய்யாறு ரவியின் சகோதரர்கள், அவரது தந்தையார் கொள்கையில் திடமாக இருர்ந்திருக்கிறார்கள்.


செய்யாறு ரவியின் திருமணத்தை நானும் கலைஞரும் நடத்தி வைத்ததோம். இதே சென்னையில் தான் ரவியின் திருமணம் நடைபெற்றது. அதில் நானும்,


கலைஞரும் கலந்துக்கொண்டோம். யாருக்கு திருமணத்தை நடத்தி வைத்தோமோ, அவரது படத்தையே திறந்து வைப்பது என்பது பெரும் சோகம். இதுபோன்ற


ஒரு சோதனை யாருக்கும் வந்துவிடக்கூடாது. நாம எத்தனையோ சோதனைகளை சந்தித்திருக்கிறோம். ஆனால், யாருடைய மண விழாவை நடத்தி


வைத்தோமோ, அவரது படத்தையும் திறப்பது என்று சொன்னால், அப்போது தான் பகுத்தறிவின் சிறப்பை சிந்திக்க வேண்டும், வாழ்க்கை என்பது இன்பமும்


துன்பமும் கலந்ததுதான். அதனால் இரண்டையும் ஏற்றுக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று சிந்திக்க வேண்டும். இந்த உலகத்தோட சிறப்பே


இன்று இருப்பவர் நாளை இல்லை என்பது தான், என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.


கடந்த மாதம் தான் அவர்களது புதுவீட்டு திறப்பு விழா நிகழ்வில் நாங்கள் கலந்துக் கொண்டோம். அப்போது ஐய்யாவின் 85 வது பிறந்தநாள் விழா, வீடு திறப்பு


என்று நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் ரவி தான் அனைவரையும் அழைத்துச் சென்றார். அவ்வளவு சிறப்பாக நடந்தது நிகழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை


பகிர்ந்துக்கொள்வதே மாநாடு போல நடந்தது. அவரது சகோதரர் என்னால் தயாரிக்கப்பட்டவர், எனது உதவியாளர் என்று சொல்லலாம். அவர் விடுதலை


அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி குறித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி நல்லா நடந்தது ஐயா, ரொம்ப நன்றி, நல்ல மரியாதையாக இருந்தது,


என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பும் ஸ்டுடியோவில் வெளியாகிக் கொண்டிருந்தது. அது தான்


வாழ்க்கை, எதிர்பாராதது நடந்துவிடும். அவரிடம் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை,. நல்ல பழக்கங்கள் மட்டுமே இருந்தது. அதனால் தான் அவருக்கு


இவ்வளவு வாழ்த்துகள். அவர் இன்னும் நூறாண்டி வாழ்ந்திருக்கலாம் அந்த அளவுக்கு வசதிகள் வந்திருந்தாலும், அவர் அரைநூற்றாண்டு வாழ்க்கையை தான்


வாழ்ந்திருக்கிறார். ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைவிட, வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பது தான் முக்கியம். அப்படி வாழும் போது


அவரது சரித்திரம் என்பது ரொம்ப வியப்பாக இருக்கிறது. ரவி மேலே எனக்கு தனி பிரியம் என்னவென்றால், நிறைய தோழர்களை எனக்கு அறிமுகம் செய்து


வைப்பார். எதாவது ஒரு நிகழ்வுக்கு வந்தால், பத்து பேரை அறிமுகம் செய்து வைப்பார், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க ஆசைப்படுவார். தந்தை பெரியாரின்


முக்கியமான இரண்டு வாக்கியம், “மனிதன் தானாக பிறக்கவில்லை, தனக்காகவும் பிறக்கவில்லை” என்பது தான். அடுத்தவருக்கு உதவுவது தான் பகுத்தறிவு.


இல்லறம் துறவறம் என்று சொல்லுவார்கள், இன்று துறவறம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஹைடக் துறவிகளாக இருக்கிறார்கள், அல்லது


துறவிகள் போட்டி போட்டுக்கொண்டு தொழில் செய்கிறார்கள். அதனால் தான் தந்தை பெரியார் தொண்டரகம் என்று சொன்னார்கள். அப்படி ஆனால், தன்


குடும்பம், தன் பிள்ளை என்று இல்லாமல், மற்றவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் ரவியின் குடும்பத்தில்


உள்ளவர்கள் மட்டும் திராவிட கொள்கைகளை பின்பற்றவில்லை, ரவி தனது படங்களின் மூலமாகவும் கொள்கைகளை பரப்பினார். பெரியாருக்கு சினிமா


என்றால் பிடிக்காது என்று சொல்வார்கள், அப்படி ஏதும் இல்லை, அந்த சினிமா எதை வலியுறுத்துகிறது என்பதை வைத்துதான் அவரது கருத்து இருக்கும்.


அதுபோல சகோதரர் சொன்னது போல ரவியின் வாழ்க்கையை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 70 ஆண்டுகளை தாண்டி விட்டது. முன்பெல்லாம் 20, 30 என்று இருந்த வாழ்க்கை தற்போது 70 ஆண்டுகள் வாழலாம்.


முன்பெல்லாம் பெண் கருவுற்றால், கிராமத்தில் சொல்வார்கள் தலையில் சாவ வச்சிருக்கா, எப்போ எதுவேனாலும் நடக்கும் என்று. ஆனால், இப்போது


அப்படியெல்லம் இல்லை, பல வசதிகள் வந்துவிட்டது. அப்படி இருந்தும் இதுபோன்ற சில நிகழ்வுகள் நடக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு


செய்தி வந்தது, அதை நான் வாழ்வியல் சிந்தனையில் எழுதியிருந்தேன். ஓசூரில் 15 வயது மாணவரின் தாத்தா, நன்றாக இருந்தவர் திடீரென்று


மரணமடைந்துவிட்டார். மருத்துவரிடம் கேட்டதற்கு சைலண்ட் ஹார்ட் ஹட்டாக் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை கேட்ட அந்த மாணவன், எதனால் நம்


தாத்தாவுக்கு இப்படி வந்தது என்று சிந்தித்தவன், அது குறித்த ஆய்வில் ஈடுபட்டு, சைலண்ட் ஹார்ட் ஹட்டாக்கை கண்டறிவதற்கான கருவியை


கண்டுபிடித்திருக்கிறான். அதுமட்டுமல்ல, பல வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த கருவியை பெரும் தொகைக்கு கேட்டும் அதை கொடுக்காதவன், இதை


மக்களுக்காக, ஏழை எளியோர் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறான். அந்த சிறுவன் தனது தாத்தாவின் மரணத்தின்


தாக்கத்தினால் எத்தகைய ஒரு பாடத்தை பயின்றுக்கிறான் என்று பாருங்கள். அப்படி தான் நம் கலைஞர்கள் கூட, கலைஞர்கள் மட்டுமல்ல, மருத்துவர்களுக்கே


இதுபோன்ற சூழல் அமைந்திருக்கிறது. எனவே, என்னதான் பணிகள் இருந்தாலும், நமக்கு என்ன தான் திறமைகள் இருந்தாலும், உடல் நலத்தை பேணிகாப்பது


என்பது ரொம்பவே முக்கியம். அதிகபட்சமாக தினமும் 10 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.


வயதானவர்களாக இருந்தால் ஆண்டுக்கு இரு முறை உடற்பரிசோதனை செய்யலாம்.


எவ்வளவு தான் அறிவு படைத்தவர்களாக இருந்தாலும், நமது தலைவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டார்கள். முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு


பிறகு தான் நோய்கள் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களினால் சிறு வயதிலேயே பல நோய்கள் வருகிறது.


இளைஞர்கள் வீட்டு உணவை சாப்பிடுவதில்லை. பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய ருசியை தேடி உடலை வீணாக்கிக் கொள்கிறார்கள். எனவே அறிவை


பெருக்கி கொள்வதோடு, நமது உடலையும் நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்துக் கொண்டு அவரது இந்த வாழ்க்கையை பாடமாக


எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதன் நிறைய சம்பாதிக்கலாம், பெரிய பதவிகளுக்கு போகலாம், பெரிய மனிதர், புகழ்பெற்ற நடிகர் என்று பெயர் வாங்குவதை


விட ஒரு நல்ல மனிதர் என்ற பெயர் வாங்குவது தான் சிறப்பானது. நிறைய அளவுக்கு கூட்டம் இருக்கிறது, இதில் மனிதத்தை தேடுவது தான் முக்கியம்.


தன்னைப் போல மற்றவர்களை நினைப்பது, மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, மற்றவர்களுக்கு கைகொடுத்து தூக்குவிடுவது, சமுதாயத்தில்


ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்வது என்பதெல்லாம் மிக மிக முக்கியம். அவற்றுக்கெள்ளாம் ஒரு எடுத்துக்காட்டக திகழ்ந்தவர் தான் படமாக இருக்கும்


ரவி அவர்கள். எனவே அவர்கள் மறைந்தும் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார். அவரது குடும்பம் எந்த நிலையிலும் சாயாது விழாது, அவர் இருந்தால்


எப்படி நடத்துவாரோ, அதைவிடவும் சிறப்பாக நடத்த அவரது துணைவியாருக்கு தைரியத்தை கொடுத்துச் சென்றிருக்கிறார். அவரது குடும்பம் தனி குடும்பம்


அல்ல, நாம் அனைவரும் அந்த குடும்ப உறுப்பினர்கள், அந்த குடும்பத்தை பாதுகாக்க கூடியவர்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம்.


அவருடைய தந்தைக்கு வந்த சோதனை எனக்கு வந்ததை போல, அவருடைய திருமணத்தையும் நடத்தி, இப்போது அவரது பட திறப்பிலும்


கலந்துக்கொள்கிறேனோ, அதுபோல தான் அவரது தந்தையின் நிலையும். இதுபோன்ற முதுமை காலத்தில் நமது சடங்குகளை பிள்ளைகள் செய்ய வேண்டும்


என்று நினைப்பார்கள். ஆனால், பிள்ளைகள் சடங்குகளில் நாம் கலந்துக்கொள்வது பெரும் சோகம். ஆனால் இது தான் வாழ்க்கை. இன்பமும் துன்பமும்


சேர்ந்தது தான் வாழ்க்கை. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். துன்பத்தின் விளிம்புக்கு சென்றுவிட கூடாது. துக்கத்தை துறத்தி நாம் வாழ்ந்துக்காட்ட


வேண்டும் என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.








இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது,


“எல்லோருக்கும் தெரியும் செய்யாறு ரவி கருப்பு சட்டை போட்டிருப்பாரு. திராவிட கொள்கையில் ஊறிப்போய் இருப்பாரு என்பது ஆனால், மற்றவர்களிடம்


அன்பு காட்டுவதில் அவரைப்போல யாரும் இருக்க முடியாது. 2013 ஆம் ஆண்டு இயக்குநர்கள் சங்க தேர்தலில் நான் போட்டியிட்டேன். ஆர்.வி.உதயகுமார் எதிர்


அணியில் போட்டியிட்ட போது, அவரது அணியில் செய்யாறு ரவி போட்டியிட்டார். ஆனால், பிறகு உதயகுமார் விலகிட்டாரு, நான் வெற்றி பெற்றேன். நான்


வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியான போது எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர் அவர் தான். எங்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிச்சாறு.


மற்றவர்களுக்கு உதவி செய்வது அவருடைய தனித்துவமான கேரக்டர். ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் இருக்கும் அதுபோல ரவிக்கு பிறருக்கு உதவி


செய்யும் கேரக்டர் இருந்தது. அவரே முன்வந்து சார் உங்களுக்கு எதாவது செய்யனுமா என்று கேட்பார். அவரது மறைவு சின்னத்திரைக்கும், பெரிய திரைக்கும்


மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய இயக்குநர்கள் சங்கம் தயாராக இருக்கிறது.” என்றார்.


பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது,


”ரவி வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கில் எங்களுடன் இருந்தார். 33 வருஷமாக எனக்கு தெரியும். நெருங்கிய நண்பர். ரவி இறந்துவிட்டார் என்ற விஷயமே


என்னால் நம்ப முடியல. அவர் பிலிம் இன்ஸ்ட்டியூட்ல சேர்ந்தது முதல், உதவி இயக்குநராக பணியாற்றியது, இயக்குநரானது என்று எதையும் மறக்க முடியல.


ஐயா சொன்ன மாதிரி வாழ்க்கையில் எதிர்பாரதது நடக்கும் அதை நாம ஏற்றுக்கொள்ள வேண்டும். ரவிக்கும் எனக்கும் நட்பு என்பது பிலிம்


இன்ஸ்ட்டியூட்டிலேயே ஏற்பட்ட ஒன்றாகும். ஒரு சமோசாவை நான்காக பங்கு போட்டு சாப்பிட்டு நாங்க வாழ்ந்திருக்கோம். எந்த நல்ல விஷயமாக இருந்தாலும்


அதை ரவி பகிர்ந்துக்கொள்வார். ரவி என்றாலே அவரது சிறித்த முகம் தான் நினைவுக்கு வரும். அவரது இறப்பு செய்தியை கேட்டு என்னால் நம்ப முடியல,


நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சந்திக்கும் போது எந்த அறிகுறியும் இல்லாம இருந்தார். படம் இயக்கும் போதே மரணம் அடைந்தது என்பது யாருக்கும்


கிடைக்காத பாக்கியம். இது நல்ல விஷயம் இல்லை என்றாலும், ஒரு இயக்குநருக்கு கிடைத்த கெளரவமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஐயா சொன்னதைப் போல ரவியின் மரணம் பலருக்கு பாடமாக இருக்க வேண்டும். நானும் இதை பாடமாக எடுத்துக்கொண்டு எனது உடலை பேணிகாக்க


நினைத்திருக்கிறேன். ரவியின் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, உங்களது தந்தையின் சகோதரணாக என்னை பாருங்கள், உங்களுக்கு என்ன உதவி


வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள், அது எதுவாக இருந்தாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன், என்ற உத்திரவாதத்தை இந்த


மேடையில் கொடுக்கிறேன், நன்றி.” என்றார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...