Sunday 19 March 2017

கன்னா பின்னா திரைவிமர்சனம்

ஒரு படத்தை எடுக்க கதையை யோசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நம்மை சுற்றியிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் நேர்ம உற்று நோக்கினாலே பல 100 கதைகள் நம் மூளைக்குள் தோன்றிவிடும். இந்த படமும் அந்த ரகத்தை சேர்ந்ததுதான்,


படத்தில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அஞ்சலி ராவ் ஒரு தயாரிப்பாளரை பார்த்து அட்வான்ஸ் வங்கிவிடுகிறார். கதை இருக்கா? என்று அவரது நண்பர்கள் கேட்க. அதெல்லாம் உருவாக்கிடலாம் வாங்க என்று பார்க், பீச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் படத்தின் நாயகன் தியா இவர்களது கண்ணில் படுகிறார். தியாவுக்கோ எப்படியாவது ஒரு பெண்ணை பார்த்து காதலித்து திருமணம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் இவர் ஐ லவ் யூ சொல்லும் பெண்ணெல்லாம் பின்னங்கால் பொடறியில் பட ஓடுகிறார்கள்.


ஒரு பிகரை உஷார் செய்யனும்னா பேஸ்புக்ல அக்கவுண்ட் வேண்டும் என்று யாரோ போற போக்கில் சொல்லிவிட பேஸ்புக் அக்கவுண்டை உருவாக்க இவர் செய்யும் காரியங்கள் திரையரங்கில் சிரிப்பலைகள் அடங்க கொஞ்சம் நேரம் ஆகிறது. எப்படியோ அடிச்சு புடிச்சு பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்த உடனே ஹன்சிகாவுக்கு Friend Request அனுப்புகிறார். ஊருல 99 சதவிகிதம் பொய்யான பேரில் பொய்யான ஆட்கள் உபயோகிப்பார்கள் என்பது கூட தெரியாமல் ஆண்டி முதல் ஆயா வரை “ஹாய்” மெசேஜ் அனுப்புகிறார். கடைசியில் இவருக்கென ஒரு பிகர் உஷார் ஆனதா? இல்லையா? என்பதை 2 மணி நேர நகைச்சுவை விருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.


படத்தில் நாயகனாகவே இயக்குனர் தியா நடித்திருக்கிறார். நாயகனுக்கான அம்சங்கள் இல்லை என்றாலும் ஆக்‌ஷன் முதல் காமெடி வரை அனைத்தும் நன்றாகவே செய்திருக்கிறார். நாயகி என்று யாருமில்லை. அதனால் அந்த போர்ஷனை வெட்டி எடுத்துவிடுவோம். (நாயகி இல்லைன்னு சொன்னதும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்... ஆனாலும் படத்துல கலர்ஃபுல் சியர் கேர்ள்ஸ் இருக்காங்க மக்கா)...


ஒரு முக்கியமான விஷயம் மாரி என்ற பெயரில் ஒரு ரவுடி வர்றாரு. அவர் ஏன் வர்றாரு எதுக்கு வர்றாருன்னு யாராவது கண்டுபுடிச்சா சொல்லுங்க... தியாவின் அப்பா,அம்மாவாக நடித்திருப்பவர்கள் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்றுதான் சொல்லனும். இவர்கள் வரும் காட்சியில்தான் கொஞ்சமாவது தியேட்டரில் சிரிப்பு சப்தம் கேட்குது.


இசை ரோஷன் சேதுராமன் பின்னணி இசையில் காது கிழிந்தாலும், ஒரு பாடல் அதுவும் “லிங்க்ரி முட்டாய்” பாடல் இளைஞர்களை கவரும். ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு ஏற்ற விதத்தில் இருக்கிறது.


இயக்குனர் தியா - நாளை இயக்குனர் படைப்பு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் படத்தை பார்க்க நேர்கிறது. அதை பூர்த்தி செய்ய இயக்குனர் அதிகமாகவே மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. வாழ்த்துகள்.

- See more at: http://cineithal.com/newsdetail/4577#sthash.DL1dJ8TJ.dpuf

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...