Wednesday 15 March 2017

​"மாநகரம்" திரைப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோரை வாழ்த்தினார்

​"​மாநகரம்​"​ திரைப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாநகரம் திரைப்படத்தை கண்டுகளித்துள்ளார். படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு "கண்ணா ஹா ஹா" !!! படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார்.


எஸ். ஆர். பிரப தயாரிப்பில் "ஜோக்கர்" திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் குழுவினரை அழைத்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தரமான படைப்பு என்று எல்லோரும் பாராட்டும் “ மாநகரம் “ திரைப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...