Friday 24 March 2017

நடிகர் ஆரி கலந்துகொண்ட ரோட்டரி சங்கமும் ஷுத்தா மற்றும் ஹியுமா சிறப்பு மருத்துவமனைகளும் இணைந்து, நடத்திய உலக காசநோய் தினமான மார்ச் 24 இன்று விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.

உலக காசநோய் தினமான மார்ச் 24 இல் கே பி தாசன் சாலை, ஆழ்வார்பேட்டையில் காலை 11 மணி முதல் 12 மணிவரை காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊட்டும் மனித சங்கிலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 லட்சம் பேர் காச நோயால் இறக்கின்றார்கள். இந்த அச்சுறுத்திம் நோய் பெரும்பாலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.


அதுகுறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக 1882 இல் டாக்டர் ராபர்ட் குச் காசநோய்க்குக் காரணமான டிபி பாசிலஸ் என்கிற கிருமியைக் கண்டுபிடித்து சக விஞ்ஞானிகளை மலைக்க வைத்த தினமான மார்ச் 24 உலக காச நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


உலக காசநோயாளிகளில் 25% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். திருத்தியமைக்கப்பட்ட காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். காசநோய், மசடைந்த காற்று, சளி, இருமல் மற்றும் சளியைக் கண்ட இடத்தில் சிந்துவதால் துப்புவதால் காசநோய் பரவுகிறது.


ரோட்டரி சங்கமும் ஷுத்தா, ஹியுமா சிறப்பு மருத்துவமனைகளும் மற்றும் SIET கல்லுரி மாணவிகள் இணைந்து உலக காசநோய் தினமான மார்ச் 24 இன்று இந்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, சமூக.சேவகர் நிஷா தோட்டா உட்பட முன்னணி மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...