Sunday 19 March 2017

வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி முதல் 'தாயம்' உருட்டப்படுகிறது

'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து, அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் 'தாயம்' திரைப்படம், வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. பி.திரு இணை தயாரிப்பு செய்திருக்கும் 'தாயம்' திரைப்படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படப் புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் புதுமுகம் ஐரா அகர்வால் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


"இதுவரை எவரும் கண்டிராத புத்தம் புதிய கதைக்களத்தை கொண்டு தான் நாங்கள் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தோம். அப்படி பல தரமான நல்ல கதைகளில் இருந்து மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் இந்த 'தாயம்'. இயக்குநர் கண்ணன் ரங்கசாமியின் கதை மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கின்றது. ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் 'தாயம்' திரைப்படம், நிச்சயமாக வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி அன்று அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை தரும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஏ ஆர் எஸ் சுந்தர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...