Thursday 2 March 2017

பிரம்மாண்ட முறையில் இங்கிலாந்தில் திரையிடப்படும் பாகுபலி 2

இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் காணவுள்ளனர்


காட்சிக்கு காட்சி பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் புகுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே.


பிரபாஸ் பாகுபலியாக வாழ்ந்து அனைவரின் மனதையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக திகழும் இவ்வேளையில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு விண்ணையும் எட்டும் வண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.


இறுதி கட்டத்தை எட்டியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் 'பாகுபலி 2'ம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்கள் 'பாகுபலி 2'ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றன.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...