Wednesday 22 February 2017

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “ இப்படத்தில் கதையின் நாயகர்களாக “ விக்ராந்த் “ “ சந்தீப் கிஷன் “ ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலாமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து முதலில் சி டிவி நிறுவனத்தில் பணியாற்றிய இவர். 

அதன் பின்னர் 2000 ஆண்டில் இருந்து ஏ.வி.ஏ.எம் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 2000 ஆண்டில் இருந்து 2008 ஆண்டு வரை ஏ.வி.எம் நிறுவனத்தில் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றினார். அதன் பின் 2008ஆம் ஆண்டில் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் நிறைய படங்களில் பணியாற்றிய பின்னர். இயக்குநர் சுசீந்திரன் விரும்பியதால் தயாரிப்பு மேற்பார்வையாளர் ஆண்டனி இப்போது “அறம் செய்து பழகு “ திரைப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.



முதல் படமே தயாரிப்பாளரான உங்களுக்கு இயக்குநர் சுசீந்திரன் போன்ற மிக சிறந்த இயக்குநருடன் அமைந்துள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் “அறம் செய்து பழகு “ திரைப்படம் என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் ?? என்று நாம் கேட்டபோது “ ஆம் , இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே இயக்குநர் சுசீந்திரன் தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. 

“ அறம் செய்து பழகு “ திரைப்படம் இயக்குநர் சுசீந்திரனின் மாபெரும் வெற்றி படங்களான “ நான் மகான் அல்ல “ , “ பாண்டிய நாடு “ போன்ற ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் ஆண்டனி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...