Thursday 23 February 2017

தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் வரவேற்பைப் பெற்ற துருவங்கள் பதினாறு


சமீபத்தில் வெளிவந்த `துருவங்கள் பதினாறு’ என்ற படம் 50 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிச்சைக்காரன் படத்தைத் தெலுங்கில் வெளியிட்டவர்களே இந்தப் படத்தையும் வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், கன்னடாவிலும் இப்படம் வெற்றிக்கனியை பறித்ததையடுத்து, இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்வதற்காக நடிகர் உபேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் மொத்த டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை "WRITER IMAGINATIONS" MAHAVISHNU" வாங்கியிருக்கிறார்.

மேலும், துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனை, இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் பலர் தங்கள் வீட்டிற்கே அழைத்துத் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கேரளாவிலும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பெரிய ஹீரோக்கள் படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் மத்தியில், குறைந்த பட்ஜெட் படமென்றாலும் தரமான படமாக வெளிவந்துள்ளது. மேலும், தரவிறக்கம் செய்யும் பல வலைதளங்கள் இருக்கையில் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது என்பது இப்படத்தின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...