Tuesday 7 February 2017

பிப்ரவரி 9 முதல் "கொளஞ்சி" படத்தின் இசை

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் உருவான "கொளஞ்சி" திரைப்படத்தின் இசை வெளியிடு பிப்ரவரி 9ம் தேதி சூரியன் FMல் நடக்கவுள்ளது. மேலும் இப்படத்தின் முன்னோட்டத்தை சமுத்திரகனி அவரின் ட்விட்டர் தளத்தில் அதே நாள் அன்று வெளியிடுகின்றனர்.

கொளஞ்சி படத்தில் சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் "தமிழன் டா" பாடல் சமீபத்தில் யூடுயுப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

"கொளஞ்சி" படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் ஒரு பாடலை யுகபாரதியும் மற்ற பாடல்களை தயாரிப்பாளர் நவீனும் எழுதியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு - விஜயன் முனுசாமி, படத்தொகுப்பு - ஆதியப்பன் சிவா

உலகமெங்கும் "கொளஞ்சி" திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகின்றது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...