Wednesday 8 February 2017

சூர்யாவின் சி3 திரைப்படத்தை அனுமதி இல்லாமல் இணைய தளங்களில் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!

சூர்யாவின் சி3 திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார். இதற்க்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் கலைப்புலி s.தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணைய தளத்தில் வெளியிட கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...