Tuesday 14 February 2017

விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தக திருவிழா 2017

 

பிரஸ் குறிப்பு - நாள் 4 - 9 பிப்ரவரி 2017

விவேகானந்த நவராத்திரியின் நான்காவது நாள், ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்களின் பஜனையுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிருந்து, பிரம்மசாரி ஆதி சைதன்யாவாசித்தார்.

சுவாமி அபவர்கானந்தர், ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா விஜயம், சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்கள் பற்றி பேசினார். சுவாமிஜி விஜயம் செய்த பொழுது,சென்னை பக்தர்கள் தான் முதன் முதலில் அவருடைய மகத்துவத்தை அடையாளம் கண்டு கொண்டனர். சிகாகோ சர்வ மத மகாசபைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.

சுவாமிஜி மேற்கில் இருந்தபோதும் கூட, இந்த இளைஞர்கள் அயராது அவரதுநிதி தேவைகளை கவனித்துக்கொண்டனர். புகழுடன் சுவாமிஜி சென்னைக்கு திரும்பிய போதுசென்னை இளைங்கர்கள் பிரம்மாண்டமானவரவேற்பைவழங்கினர்.சுவாமிஜியின் சொற்களை உத்தரவாக செயல்படுத்தினர். பிரம்மவாதின், பிரபுத்த பாரத்தா போன்ற இதழ்களை தொடங்கி சிறப்பாக நடத்தினர். எனவே சென்னை சீடர்களுக்கு சுவாமிஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியா ஆன்மீக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடம் உண்டு.

கே வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி, விழாவின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். அவர் சொன்னார்: "சுவாமிஜி 9 நாட்கள் தங்கியிருந்த அதே புனிதமான இடத்தில் விவேகானந்தர் நவராத்திரியை கொண்டாடுகிறார்கள். இதுசிறப்பு மிக்கது.

'பயப்படாதே!' - சுவாமிகள் இந்த குரல் இந்த வளாகத்தில் நுழையும் அனைவருக்கும் கேட்கிறது.

சுவாமி விவேகானந்தர் சுதந்திரப் போராட்டத்திற்கான விதைகளை விதைத்தார். சுதந்திர இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களான மகாத்மா காந்திஜிமற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,இருவருமேசுவாமிஜியால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள். செப் 11 - சுவாமிஜியின்சிகாகோ உரை, பாரதி மறைவு மற்றும் தினமணி செய்தித்தாள் தொடக்கப்பட்ட சிறப்பான நாள்.

நான், சுவாமிஜி பற்றி, அவரது செய்திளைதொடர்புடைய நிகழ்வுகளையும் ஊடகம் வாயிலாக வெளியிடக்கூடிய புனிதமான பணியை செய்து வருகிறேன்.

நஞ்சுண்டராவ் ஒரு நாள், தியாசபிகல் சமூகத்தின் தரையில் ஒரு நிழற்ப்படத்தை கண்டார். தரையைக் சுத்தம் செய்து கொண்டு இருந்தார் ஒருவர். ராவை அந்த படம் மிகவும் ஈர்த்தது அதை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்று, தனது பூஜை அறையில் வைத்து கொண்டார். பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு சுவாமிஜி பரிச்சியமானார். ஒருமுறை ஸ்வாமிஜி அவரது வீட்டிற்குவந்திருந்தார். அந்தபடத்தை பார்த்த, சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் குளமாக நின்றது. சுவாமிஜியின் அழுகை எல்லோருக்கும் ஆச்சரியமூட்டியது. அந்த படம் அங்கு எப்படி வந்தது என்று நஞ்சுண்ட ராவ் விளக்கினார். அந்த படம் அவரின் மாஸ்டரான– குரு – பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் படம்.ஆமாம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் யாருக்கும் தெரியாமல் அங்குவந்து ராவின்பூஜைகளை ஏற்றுக்கொண்டார். எனவே இந்த இடம் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகும்.

கிடி மற்றும் சுவாமி விவேகானந்தருக்கு இடையே நடந்தகடிதம் தொடர்புகள் எங்கும் சேமிக்கபடவில்லை. இது பெரும் துரதிர்ஷ்டம். இருந்திருந்தால் மிக பெரிய புதையலாகியிருக்கும்.

திரு வைத்தியநாதன் மிகுந்த ஆர்வத்துடன்,சுவாமிஜின்பல பக்தர்கள் மற்றும் அவரது சீடர்கள் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். இவ்வாறு கூறினார்: நான் என் வாழ்க்கையில் எந்த சிக்கலை சந்திக்கும் போதும்,ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வார்த்தைகளில் தீர்வு காண்கிறேன்.

மேற்கத்திய இணைவு இசை நிகழ்ச்சி – சிக்கல் குருசரண் மற்றும் அனில் ஸ்ரீனிவாசன் (பியானோ) சேர்த்து உணர்வூட்டும் கர்நாடக காண மழை பொழிந்தனர். அவர் மகாகவி பாரதியார் எழுதிய புகழ்பெற்ற "வெள்ளை கமலத்திலே" பாடலுன் தொடங்கினார். அடுத்து பாபநாசம் சிவன் இசையமைத்த "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" வந்தது. இந்த நிகழ்வு கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஏற்பட்டபாலம் போல் அமைந்தது. இரண்டையும் இணைத்த சுவாமிஜிக்கு நல்லதொரு அஞ்சலி.

தெய்வீக புத்தக கண்காட்சியை500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பார்வையிட்டனர். மடத்தின் துறவி பெருமக்கள் சுவாமிகளின் சிந்தனைகளை சார்ந்த ஊக்கமூட்டும் விரிவுரைகள் வழங்கினர். மாலை நவராத்திரி நிகழ்வில்300பேர்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...