Thursday 9 February 2017

விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தக விழா 2017

விவேகானந்த நவராத்திரியின்மூன்றாம் தினம், சென்னை - வித்ய வாணி பஜன் மண்டலியின், பஜனையுடன் தொடங்கியது. இளைஞர்கள் ஆர்வத்துடன் பாடினர், பார்வையாளர்களை தெய்வீகஉணர்வில் திளைத்தனர்.

சுவாமி விவேகானந்தர் எழுச்சி மிகு உரைகளிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு, சுவாமி புத்திதானந்தமகாராஜ் 'திருஞானசம்பந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார். அதிலிருந்து சில கருத்துகள்: திருஞானசம்பந்தர் மற்றும் ஸ்வாமிஜி இருவரும் சிவன் பெருமானின் பக்தர்கள். அவர்கள் உலகை இறைவனின் மறு வடிவமாக கண்டனர். ஞானசம்பந்தர்வேதங்கள் விருத்தியடைய செய்ய பிறந்தார் என போற்றப்பட்டவர். சுவாமிஜி கிழக்கில் இருந்து மேற்கு வரைவேத வழியான வேதாந்தத்தை போதித்தார். அவர்கள் இருவரும் வறுமை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்காக முழு மனதோடு சேவை செய்தனர்.

இவ்வாறு மகாராஜ் திருஞானசம்பந்தரின் வாழ்க்கை, சேவை மற்றும்அவர்செய்த அற்புதங்களைப் பற்றிஒரு தெளிவான விளக்கம் கொடுத்தார்.

ஸ்ரீ என் எஸ் வெங்கடேஷ், நிர்வாக இயக்குனர், லட்சுமி விலாஸ் வங்கிசிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறினார் : இந்த தெய்வீக புத்தக கண்காட்சி கண்கள் மற்றும் மனதிர்க்கு ஒரு நல்ல விருந்து. சுவாமிஜி தங்கியிருந்த இந்த நாட்களைகொண்டாட மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. அந்நியமக்கள் உலக கைப்பற்ற முயன்ற போது, சுவாமிஜி மக்களின் மனத்தை நல்ல எண்ணங்கள் மூலம் வெற்றி கொண்டார். சுவாமிஜி, மேற்கு நாட்டு மக்களுக்கான ஒரு அமைதியான வாழ்க்கை முறையை கொடுத்திருக்கிறார். எனவே நாம்பிறருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் பணியாற்ற வேண்டும்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பிரத்தனா தியேட்டர் குழுவினர் வழங்கியசகோதரிநிவேதிதா நாடகம் அரங்கேறியது. சுவாமிஜின்ஆன்மீக மகள் மற்றும் அணுகக் சீடரான சகோதரி நிவேதிதாவை பற்றிய நாடகம்நன்குசித்தரிக்கப்பட்டிருந்தது. மேற்கிலிருந்து வந்து, டார்ஜீலிங்கிலிருந்து இறுதி வரை சகோதரியின்வாழ்க்கை மற்றும் சேவை மிகத்தெளிவாகவும், உற்சாகமளிக்கும் வதமகவும் அமைந்தது. சுவாமிஜி மற்றும் சகோதரி நிவேதிதாக நடித்த கிரிஷ் ஐயாபாத் மற்றும் தீபிகா ஸ்ரீகாந்த் மிகவும் நன்றாக நடித்தனர். அவர்கள், நடிக்க வில்லை கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்தனர். சுருக்கமாக, இந்த நாடகம்சகோதரியின்150வது பிறந்த ஆண்டிற்கானஒரு பொருத்தமான அஞ்சலியாக அமைந்தது.



பல்வேறு பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தெய்வீக புத்தக கண்காட்சிக்கு வந்தனர். மாணவர்களை சுவாமிஜின்கருத்துகளின்அடிப்படையில் எழுதப்பட்ட சுய முன்னேற்ற புத்தகங்கள் பெரிதும் கவர்ந்தது.மடத்தின்துறவிகள் மாணவர்கள் ஊக்கமூட்டும் உரையாற்றினர். மாலை நவராத்ரிநிகழ்ச்சியில்500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...