Friday 6 January 2017

நடிகர் ஓம்புரி மறைவு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

மாபெரும் நடிகர் ஓம்புரியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.

பஞ்சாபில் பிறந்து இந்தியாவிலுள்ள அனேக மொழி படங்களில் நடித்து, 45 வருட காலம் தன் வாழ்க்கையை கலைதுறைக்காக அர்ப்பணித்தவர் ‘ஓம்புரி’ அவர்கள். இந்திய மொழி படங்கள் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்து நம்மை பெருமைப்படுத்தியவர் ஆவார். மேலும், நாடக துறையின் வளர்ச்சிக்காகவும் அரும்சேவை செய்தவர்.

‘பத்மஸ்ரீ’, சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டவர். அவரது மறைவு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...