Thursday 5 January 2017

அப்பாஸ் கலைவிழா 2017 - வெள்ளி விழா கொண்டாட்டம்.

அப்பாஸ் கல்சுரல் அகடமி சென்னை மாநகரின் பொழுது போக்கு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நிறுவனம்.


என்றும் நினைவில் வாழும் அப்பாஸ் ஜெயராமன் அவர்களின் சீரிய உழைப்பு இன்று இந்த நிறுவனத்தை சிகரம் தொட வைத்திருக்கிறது.


மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் தனக்கே உரிய சீரிய முறையில் நடத்தி வந்த அப்பாஸ் நிறுவனர் திரு ஜெயராமன் ஒரு ஒருங்கிணைந்த கலைவிழாவினை ஆண்டு தோறும் நடத்த ஆசைப்பட்டார். அவருடைய இந்த கனவை பத்ம பூஷண் திரு K.J.ஜேசுதாஸ் அவர்களிடம் தெரிவிக்க அவர் திரு ஜெயராமனை உற்சாகப் படுத்தி உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி தன் பரிபூரண ஆசியும் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி அளித்தார்.


திரு ஜேசுதாஸ் அவர்களின் நல்ல உள்ளம் தந்த ஒத்துழைப்பு இன்று அப்பாஸ் கல்சுரல் அகடமியை வெள்ளி விழா காணச் செய்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு அன்று தொடங்கி இந்த ஆண்டு வரை எல்லா விழாவிலும் ஜேசுதாஸ் அவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பாடி நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.


பொங்கல் விழாவின் போது பத்து நாட்கள் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழா காமராஜர் அரங்கில் மிக அழகாக கலை உணர்வோடு அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடைபெறுவது இதன் தனிச் சிறப்பு.


கலைஞர்கள், பாராட்டும் சுவைஞர்கள், ஊடகங்களின் பங்களிப்புடன் இதனை மிகச்சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்த விளம்பரதாரர்கள் என்ற ஐந்து முகங்களைத் தாங்கும் மங்களகரமான குத்து விளக்காக அப்பாஸ் இந்த கலைவிழாவினை ஜனவரி மாதம் 7ந் தேதி மாலை பத்ம பூஷண் K.J. ஜேசுதாஸ், S,P.பத்ம பூஷண் பாலசுப்ரமணியம் இவர்களின் தலைமையில் உங்கள் பங்களிப்பில் தொடங்க இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இயல் இசை நாடக நாட்டிய நிகழ்ச்சிகளின் அணி வகுப்பு நம்மை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.


நாடகங்களில்:


கிரேசி மோகனின் கூகுள் கடோஜ்கஜன்,


திரு. Y.GEE. மகேந்திரனின் காசேதான் கடவுளடா (உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்),


S.Ve. சேகரின் கிரேஸி தீவ்ஸ் இன் பால வாக்கம்.


மதுவந்தியின் இ.வா.க.,


ஐயப்ப சரிதம் நாட்டிய நடன நிகழ்ச்சி
K.J. ஜேசுதாஸ்,O.S. அருண், T.M. கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம் ,சாகேத ராமன் போன்ற முன்னணிக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி,
நித்யஶ்ரீ மஹாதேவன், சங்கீத கலாநிதி பத்மபூஷண் சுதா ரகுநாதன், நிஷா ராஜகோபால், ஜயஶ்ரீ வைத்யநாதன், ரஞ்சனி காயத்ரி, அருணா சாய்ராம் ஆகியோரின் மனதை நிறைக்கும் இசை,
வாத்ய இசையில் கிராமி அவார்ட் விநாயகராம், ராஜேஷ் வைத்யா
ஹரிகதைக்கு விசாக ஹரி.
இப்படி எல்லோருக்கும் எப்போதும் உகந்த நிகழ்ச்சிகள் மனம் கவர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சி.


விடுமுறை நாட்களில் இன்னிசை கொண்டாட்டம் செவிக்கு விருந்து.


அப்பாஸ் கல்சுரலின் இந்த வெள்ளி விழா சிறப்பான விழாவாக அமைய உறுதுணையாக அமைந்த ஸ்பான்சர்கள்:

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...