Tuesday 13 October 2015

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் புதிய கிளை கிழக்கு கடற்கரை சாலை, காரப்பாக்கத்தில் திறப்பு


நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்..


இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை கதவு எண் 1 முத்தமிழ் நகர், ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை சென்னை 600097 என்ற முகவரியில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ...இதனை நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் பாடகர்கள் நரேஷ் ஐயர், ஹரிசரண் ஆகியோர் திறந்து வைத்தனர்.


டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திரு. சாம் பால் மற்றும் பங்குதாரர்களான தி டிமாண்டஸ் நிறுவனம் மற்றும் எம்.ஜே.ஸ்டைல் கோஷண்ட் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்களும் இதில் பங்கேற்றனர்.


கிழக்கு கடற்கரை சாலையின் காரப்பாக்கம் கிளையின் ப்ரான்ச்சைஸ்-ஆன தி டிமாண்டஸ் நிறுவனத்தினர், டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் பற்றி கூறும் போதும், வாடிக்கையாளர்கள் ஓய்வாக உணரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தில், தகுதிவாய்ந்த விற்பன்னர்களால் உங்கள் அழகு மேம்படும் என்பது உறுதி என்கிறார்.


கிழக்கு கடற்கரை சாலை, காரப்பாக்கத்தில் 1000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை போன்றவை உள்ளன.


உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்.. டோனி அண்ட் கய்-யில்..


மேலதிக விவரங்களுக்கு 044-3100 1200 | 97907 70003 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...