Tuesday 6 October 2015

தன் ரசிகர்களின் குடும்பத்திற்கு பண உதவி வழங்கிய விஜய்


கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நம் இளையதளபதி விஜய் அவர்களின் #புலி திரைப்படம் வெளீயிட்டின் போது தாம்பரம் அருகே மணிமங்கலத்தை சேர்ந்த இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் சவுந்தர்ராஜன் மற்றும் உதய குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இச்சம்பவம் இளையதளபதி அவர்களின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இளையதளபதி அவர்கள் தீடிரென்று இன்று (06.10.2015) அதிகாலை ஆறு 6.00 மணியளவில் சவுந்தர்ராஜன் மற்றும் உதய குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோரிடம் விசாரித்து ஆறுதல் கூறி பண உதவியும் வழங்கினார். 

மேலும் அவர்களிடம் தங்கள் குடும்பத்திற்கு எதனேும் உதவி வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள் கண்டிப்பாக உதவ நான் கடமை பட்டுள்ளேன் என்று கூறினார். அப்போது அப்பகுதியில் உள்ள ரசிகர், ரசிகைகள், பொதுமக்கள் இளையதளபதி அவர்களை பார்ப்பதற்கு கூட்டம் கூடி விட்டது பின்னர் விஜய் அங்கிருந்து விடைபெற்றார். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...