Tuesday 6 October 2015

சமூகத்தில் நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய கதை மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன


எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யாவழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர்P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம்‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”​.​

இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜாமந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார்.இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


‘ராஜா மந்திரி’யைத் தொடர்ந்து இந்நிறுவனங்கள் இணைந்துதயாரிக்கும் படம் “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார்.


’திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க ஹீரோயின்களாக ஐஸ்வர்யாதத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி,நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்கவேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ராம் மற்றும் நிறையபுதுமுகங்களின் அறிமுகங்களும் நடிக்கின்றனர்.


நடிகர் திலகத்தின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலின் முதல் வரியையே படத்தின் தலைப்பாகவைத்துள்ளனர். மூன்றாம் தலைமுறை முதல் இன்றுள்ள சிறார்கள்வரை ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெற்ற வரிகள் இவை.சொன்னதும் சட்டென்று எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்கும்என்பதால் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற பாடல்வரியை படத்தின் தலைப்பாக வைத்தோம். இந்த தலைப்பிற்கும்,கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார் இயக்குநர்ராகேஷ்.


இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திகதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும்அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும்படம் தான் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”

ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, இசையை‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின்இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை செல்வாR.K. கவனிக்க பாடல்களை பா.விஜய் எழுத, கலையை ரெம்போன்பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சிதருகிறார் விமல். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில்வெகுவேகமாக வளர்ந்து வருகிறது “ மறைந்திருந்து பார்க்கும்மர்மமென்ன”

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...