Friday 25 September 2015

திருட்டு விசிடி - திரைவிமர்சனம்

ஒரு படம் எடுத்து வெற்றி பெற வைப்பது பெரிய விஷயம். ஆனால் எடுத்த படத்தையே சுட்டு வெற்றி படமாக்குவது என்பது அதைவிட பெரிய விஷயம். எங்கெல்லாமோ திருடி ஒரு சூப்பர்ஹிட் படம் கொடுக்கும் கில்லாடி இயக்குனர்கள் தமிழ்சினிமாவில் சிலரே உள்ளனர்.  அந்த வரிசையில் தான் காதல் சுகுமார் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.


2013 ஆம் ஆண்டு வெளிவந்த "we're the millers" ஒரு த்ரில்லர் அண்ட் காமெடி படத்தை எடுத்துவைத்துள்ளார். போதை பொருளை வேறு ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு கடத்தி செல்வது தான் படத்தின் கதையாகும் . படத்தின் வசனங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் கூட படத்தை சுவாரஸ்யமாக பார்க்கலாம். ஆனால் திருட்டு விசிடி படத்தில் தமிழ் வசனமாக இருந்தால் கூட பல இடத்தில் காது கொடுத்து கேட்கமுடியவில்லை. அந்த ஆங்கிலப்படத்தின் கதையை நயம் குறையாமல் எடுத்திருந்தாலே போதும், படத்தை டிங்கரிங் பேஸ்ட் செய்து ஓட வைத்திருக்கலாம். ஆனால் படத்தை பெரிய திரையில் பார்த்தால் கூட 'திருட்டு விசிடி'யில் பார்ப்பது போலவே உள்ளது.


திருட்டு வி.சி.டி. என்று பெயர் வைத்தது படம் பார்த்த பின்பு தான் தெரிகின்றது, அது படத்தை திருட்டு வி.சி.டி. போடுபவர்களை பற்றி அல்ல. சிடியில் பார்க்கும் படத்தையே திருடும் இயக்குனர்களை பற்றியது என்று. இந்த படத்தின் நாயகனே படத்தின் தயாரிப்பாளர். இதனால் காதல் சுகுமாருக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இயக்குனராக ஒத்திகை பார்த்துக்கொண்டுள்ளார். இனி நானும் ஒரு இயக்குனர் தான் என்கின்ற வடிவேலு பாணியில் கோடம்பாக்கத்தை சுற்றி வரலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...