Saturday 26 September 2015

ஜிப்பா ஜிமிக்கி திரைவிமர்சனம்


கிருஷிக்கும் (கிருஷிக் திவாகர்) ஸ்ருதியும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தாலும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர்கள் . ஆனால் கிருஷிக்கின் தந்தையும் (ஆடுகளம் நரேன்) ஸ்ருதியின் தந்தையும் (தாயுமானவன் மதி) நெருங்கிப் பழகும் ஆத்மார்த்தமான நண்பர்கள். கிருஷிக் – சுருதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து , சம்மந்திகளாக ஆக்கிக் கொள்ள அவர்கள் இருவருக்கும் ஆசை .

கிருஷிக் - சுருதி இருவரும் பணி புரியும் அலுவலக நண்பன் ஒருவனுக்கு இப்போது கர்நாடக மாநிலத்தோடு இருக்கும் குடகு பகுதியில் திருமணம் நடக்கிறது.

அந்தத் திருமணத்துக்காக கோவையில் இருந்து குடகுவரை ஒன்றாகப் பயணிக்கும் கிருஷிக் – சுருதி இருவரும், அந்தப் பயணத்துக்குள் ஏதாவது திட்டமிட்டு , இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்பதை பெற்றோருக்கு – மனம் கோணாமல் – புரிய வைக்கலாம் என்று முடிவு செய்து பயணிக்கின்றனர் . அவர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லை அவர்களை ஒருவருக்கொருவர் பிடித்ததா ? பெற்றோர் ஆசைப்படி அவர்கள் வாழ்வில் இணைந்தார்களா? என்பதே,

3 பிரண்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி தயாரிக்க , அவரது மகன் கிருஷ் திவாகர் நாயகனாக நடிக்க , ஜோடியாக புதுமுகம் குஷ்பூ பிரசாத் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குனர் ரா. ராஜசேகர் இயக்கி இருக்கும் ‘ஜிப்பா ஜிமிக்கி’ படம்

குடகுப் பகுதியின் கொள்ளை கொள்ளையான இயற்கை அழகே இந்தப் படத்தின் பெரும் பலம் .

சரவண நடராஜனின் ஒளிப்பதிவு குடகின் அழகை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது.

கன்னட அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் மகனாகப் பிறந்து , அம்மாவின் அண்ணன் மகளான வாய் பேச முடியாத பெண்ணை மணந்து அன்புடன் வாழும் குடகு விவசாயி (நான் கடவுள் ராஜேந்திரன் )….குடித்து விட்டு கொடுமைப்படுத்தியே மனைவியைக் கொன்று விட்டு அவள் இறந்த பிறகு அவளைக் காதலிக்கும் லாரி டிரைவர் (இளவரசு)…

ஆகிய பாத்திரப் படைப்புகளில் இயக்குனர் ராஜசேகர் பாராட்டுப் பெறுகிறார் .

ஹீரோ ஹீரோயினிடம் இளமை இருக்கிறது . திறமை இன்னும் தேவை . பாடல்கள் ஒகே .

பலவீனமான திரைக்கதை செயற்கையான நடிப்பு , இவை காரணமாக ஜிப்பா ஜிமிக்கியால் மின்ன முடியவில்லை

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...