Wednesday 30 September 2015

அறிவிக்கப்பட்டது கெத்து படத்தின் வெளியிட்டு தேதி


நடிகர் உதயநிதி ஸ்டாலின்  நன்பேண்ட படத்தை தொடர்ந்து கெத்து படத்தி நடித்துகொண்டிருகிறார் . கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனர்  திருக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தில்  உதயநிதிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார், இது குறித்து உதயநிதி கூறும்போது, 'இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. 

எமிஜாக்சனுடன் மூன்று பாடல்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. மூன்று பாடல்களும் விரைவில் படமாக்கப்படும். டிசம்பர் 18-ம் தேதி படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன' என கூறியுள்ளார். 

உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மொவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்களை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...