Wednesday 23 September 2015

பெயர் மாறிய நலன், விஜய் சேதுபதி படம்


தமிழ் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற 'சூது கவ்வும்' படத்தினை தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் விஜய் சேதுபதி இணையும் படத்திற்கு பெயர் சூட்டப்படாமலேயே இருந்த நிலையில் தற்போது அப்படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

'காதலும் கடந்து போகும்' இது தான் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அப்படத்தின் தலைப்பு. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம்12ம் தேதி அன்று நிறைவுபெற்று தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது குரிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இப்படத்திற்கு எஸ்கிமோ காதல் என பெயரிடப்படும் என பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த அறிவிப்பு.

இப்படத்தினை அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றனர்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் மடோனா நடிக்கிறார் மேலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...