Friday 18 September 2015

மாயா திரை விமர்சனம்


தமிழில் ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு தமிழ் படம் சிறந்த திரைகதை சிறந்த ஒளிபதிவு அருமையான இசை வித்தியாசமான காட்சியமைப்பு இப்படி எல்லாத்தையும் ஒரே படத்தில் இந்தியா சினிமாவில் இதுவரை பார்க்காத பேய் படம் நிச்சயம் “மாயா” .

கணவனை பிரிந்த நிலையில் கைக்குழந்தையுடன் சினிமா வாய்ப்பு தேடுகிறார் மாயா நயன்தாரா. கடனை அடைப்பதற்காக நயன் ஒரு திகிலான பேய் படத்தை தன்னந் தனியாக தியேட்டரில் பார்க்கும் போட்டியில் கலந்து கொள்கிறார். அப்போது படத்தின் காட்சிகளுடன் இரண்டற இணைகிறார்.

இது ஒரு புறம் இருக்க… மற்றொரு புறம் பத்திரிகையில் வரும் மாயா என்ற பேய் கதைக்கு ஓவியம் வரையும் வசந்த் (ஆரி) ஒரு கட்டத்தில் உண்மையை தேடி, பேய் பங்களாவிற்கு போகிறார். அங்கும் அவரும் நயன்தாராவும் இணைய படத்தில் அதுவரை இருக்கும் குழப்பங்களுக்கு க்ளைமாக்ஸில் விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.‘மாயா நயன்தாரா… மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் இவரது கண்களும் கதை சொல்லியிருக்கிறது. ஒரு வயது குழந்தையின் அம்மாவாகவும் பாசத்திற்கு ஏங்குபவராகவும் மாறுபட்ட அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க அழுத முகமாக வந்து ரசிகர்களை ஏமாற்றி விடுகிறார்.இவர்களுடன் லஷ்மி ப்ரியா.. தன் தோழி மாயாவை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும், பேய் படம் பார்க்க சம்மதிக்க வேண்டாம் என கெஞ்சுவதும்… தோழியாக உயர்ந்து நிற்கிறார்.இவர்களுடன் ரோபா சங்கர், மைம் கோபி, அம்ஜத் கான், ரேஷ்மி மேனன் உள்ளிட்டோரும் தங்கள் கேரக்டரின் பயம் அறிந்து நன்றாக நடித்துள்ளார்கள்.இசையமைப்பாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். பாடல்களில் இன்னும் கவனம் சேர்த்திருக்கலாம். ‘நானே வருவேன்….’ பாடல் செம்ம ஓகே.இது பேய் பட வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று கூறிவிட முடியாது. ராஜேஷ்குமார் நாவல் போல இரண்டு கதைகளை பிடித்து ஒரு முடிச்சில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். ஒருவேளை நயன்தாரா போன்றொரு மாஸ் ஹீரோயின் தேவை என்று இவரை பிடித்தாரா எனத் தெரியவில்லை. நாயகி ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார். ஒரு மாறுபட்ட கதையை எடுத்தற்காக பாராட்டலாம்.ஆக மொத்தம் படம் பேய் ரகளை அதுவும் செம்ம ரகளை !!
இது ஒரு புறம் இருக்க… மற்றொரு புறம் பத்திரிகையில் வரும் மாயா என்ற பேய் கதைக்கு ஓவியம் வரையும் வசந்த் (ஆரி) ஒரு கட்டத்தில் உண்மையை தேடி, பேய் பங்களாவிற்கு போகிறார். அங்கும் அவரும் நயன்தாராவும் இணைய படத்தில் அதுவரை இருக்கும் குழப்பங்களுக்கு க்ளைமாக்ஸில் விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.‘

மாயா நயன்தாரா… மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தில் இவரது கண்களும் கதை சொல்லியிருக்கிறது. ஒரு வயது குழந்தையின் அம்மாவாகவும் பாசத்திற்கு ஏங்குபவராகவும் மாறுபட்ட அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.இது வரை சதையை மட்டும் நம்பின நயன் இந்த படத்தில் தான் கதையை நம்பி நடித்துள்ளார் அதையும் மிகவும் சிறப்பாக செய்துள்ளார்

இவர்களுடன் லஷ்மி ப்ரியா.. தன் தோழி மாயாவை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும், பேய் படம் பார்க்க சம்மதிக்க வேண்டாம் என கெஞ்சுவதும்… தோழியாக உயர்ந்து நிற்கிறார். இவர்களுடன் ரோபா சங்கர், மைம் கோபி, அம்ஜத் கான், ரேஷ்மி மேனன் உள்ளிட்டோரும் தங்கள் கேரக்டரின் பயம் அறிந்து நன்றாக நடித்துள்ளார்கள்.

ஒளிபதிவாளர் படத்துக்கு இன்னொரு மிகபெரிய பக்க பலம் காட்சிக்கு காட்சி நம்மை மிரளவைதுள்ளார் படத்தின் எல்லா காட்சிகளும் கண்களில் நிற்கிறது பயமுறுத்தும் காட்சியில் அதுக்கு எத்தமாதிரியான காட்சியமைப்பு தமிழுக்கு கிடைத்த மிக சிறந்த ஒளிபதிவாளர்

இசையமைப்பாளர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். கதைக்கு எத்த இசை வேணும் என்பார்கள் அதை மிகவும் சரியாக செய்துள்ளார் பாடல்களில் இன்னும் கவனம் சேர்த்திருக்கலாம். ‘நானே வருவேன்….’ பாடல் செம்ம ஓகே.

இது பேய் பட வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று கூறிவிட முடியாது. ராஜேஷ்குமார் நாவல் போல இரண்டு கதைகளை பிடித்து ஒரு முடிச்சில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். அருமையான கதை இதுவரை பார்க்காத திரைகதை அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான காட்சியமைப்பு சில நேரங்களில் நாம் தமிழ் படம் பார்கிரோமா இல்ல ஆங்கில படம் பார்கிறோமா என்று தோன வைத்துள்ளார் இயக்குனர் வாழ்த்துகள் புதிய முயற்சி அதை மிக சரியான முறையில் பயன்படுத்தி இருகிறார்கள் இளைஞர் அணி எப்பவும் சாதிக்க பிறந்த அணி என்பதை நிருபித்து உள்ளனர் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...