Thursday 3 September 2015

லைக்கா நிறுவனத்துடன் இணையும் தனுஷ்


நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் நானும் ரவுடி தான், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் மட்டும் இல்லாமல் விசாரணை என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை கத்தி படத்தை தயாரித்த லைக்க  புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் தயாரித்த கத்தி படத்தினை வெளியிட ஏற்பட்ட பிரச்சனைகளை அனைவரும் அறிவோம் ஆனால் இத்தருணத்தில் தனது இரண்டு படங்களையும் லைக்கா நிறுவனத்திற்கு விற்றதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த முறை இவ்விரண்டு படங்கள் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கவுள்ளது என காத்திருந்து பார்ப்போம்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...