Monday 21 September 2015

3D யில் வெளிவருகிறது புலி

இளையதளபதி விஜய் நடித்து வெளிவரவுள்ள  ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சென்சாரும் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றாகும். இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படத்தின் டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளதால் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு பல மடங்காக பெருகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் புலி பட குழுவினர்கள் படத்துக்கு புதுசுபுதுசா என்னவெல்லாம் பண்ணலாம் என்று யோசித்து வருகின்றனர் .
மேலும் ‘புலி’ திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் அளவிற்கு  படம் என்பதால் குழந்தைகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருசில திரையரங்குகளில் மட்டும் இப்படத்தை  3Dயில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் 3D பிரிண்ட் போட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அரசர் காலத்து பிரமாண்ட அரண்மனை, அதிர வைக்கும் வாள் சண்டைக்காட்சிகள் ஆகியவைகளை 3Dயில் பார்த்தால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் எண்ணமாக உள்ளது என தெரிகிறது.
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கும் இப்படத்தில் விஜயுக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர், முக்கியவேடத்தில் ஸ்ரீ தேவி மற்றும் சூதிப் மற்றும் சிலர் இப்படத்தில் நடிக்கின்றனர், மேலும் இப்படத்தை மிக பிரம்பாண்டமாக ஷிபு தமீன் மற்றும் P.T. செல்வகுமார் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...