Monday 3 August 2015

சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம் ஆனால் விஜய்க்கு சிம்பு நண்பன் - T.R பேச்சு

நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நடிகன் வளர்துவிட்ட பிறகு தன்னடக்கத்துடன் இருப்பது ரொம்ப கஷ்டம். எஸ்.ஏ.சி அவர்களும் நானும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் பார்ப்பேன். நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது அவரை பார்ப்பது போன்றே நினைத்துக் கொள்வேன். அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல தந்தை, நல்ல இயக்குநர் அவருடைய மகன் விஜய் அவர்களை எப்படி படிப்படியாக உயர்த்தி கொண்டுவந்தாரோ அதை பார்த்து நான் பெருமைபட்டவன். அது ஏன் என்று கேட்டால் அவரை போலவே என் மகன் சிம்புவையும் உருவாக்கி வருகிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.


எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அது ஏன் என்று எனக்கு தெரியாது. எஸ்.ஏ.சி அவர்களும் அவருடைய மனைவி ஷோபா அவர்களும் நானும் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது அவர்களிடையே நான் பழகும்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் பல விஷயங்களை பேசினோம்.


விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்டபிறகும் டி.ஆரின் ரசிகன் என்று கேள்விப்பட்டபிறகு எனக்கு சந்தோஷமாக இருந்தது. தலைவா படப்பிரச்சனையின்போது சிம்பு அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணா நான் உங்களுக்கு பின்னே துணையாக இருப்பேன் என்று பல வருடங்களுக்குமுன் ஒரே ஒரு ட்வீட் செய்திருந்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சிம்புவின் வாலு படப்பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் விஜய். சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம் ஆனால் விஜய்க்கு சிம்பு நண்பன் மட்டுமல்ல தம்பியும் கூட..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...