Saturday 22 August 2015

சேதுபதி ஆகிறார் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஆரஞ்சு மிட்டாய் படத்தை தொடர்ந்து அடுத்த தனது  படத்தை பற்றி சில செய்திகள் வெளிவந்துள்ளது, இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் திரு எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இந்த படம் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பிசனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு 'சேதுபதி' என்று தலைப்பு வைத்துள்ளனர், மேலும் ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் , இசையில் கலக்க திரு. நிவாஸ் கே. பிரசன்னா, படத்தொகுப்பு - திரு. ஸ்ரீகர் பிரசாத், கலையியக்கம் - திரு. பாலசந்தர், மற்றும் பல தொழில் நுட்ப கலைஞ்சர்கள் இணைந்து பணியாற்றும் இப்படத்திற்கு வாசன் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு உண்மையான, நேர்மையான  காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார், இவர் போலிசாக நடிக்கு இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் சூது கவ்வும் படத்தில் ஒரு சில இடத்தில் போலிசாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த படம் நேர்மையான, கம்பிரமான ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் இப்படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் இப்படத்தின் தகவல்கள் மிக விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...