Saturday 29 August 2015

தனி ஒருவன் திரை விமர்சனம்

நாட்டில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான குற்றங்கள்! குற்றம் செய்யும் ஒவ்வொரு குழுக்களையும் வழி நடத்தவோ பின் புலமாக இருந்து பலன் பெறவோ நபர்கள் இருக்கிறார்கள். இப்படி ஆணிவேரை தேடிக் கொண்டே போனால் மூன்று முக்கிய நபர்கள் . அந்த மூன்று முக்கிய நபர்களையும் இயக்கும் ஒருவன் .

சின்ன வயதிலேயே ஒரு கட்சியின் தலைவரான அரசியல்வாதி செய்த கொலையை தான் ஏற்று, அதற்கு பதிலாக தனது அப்பாவை எம் எல் ஏ ஆக்கி
அறிவாளி விஞ்ஞானியாக ஆனால் அயோக்கியத்தனத்தின் மொத்த வடிவமாக விஸ்வரூபம் எடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த குற்றங்களுக்கும் சூத்திரதாரியாக விளங்குகிறான் ஒருவன் (அரவிந்த்சாமி)

ஐ பி எஸ் பயிற்சியின் போதே தன்னை கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நினைத்து செயல்படும் இன்னொருவன் (ஜெயம் ரவி )

சமூகத்தில் நடைபெறும் மொத்தக் குற்றங்களுக்கும் காரணமான குற்றவாளியை தேடி தனது காதலி (நயன்தாரா) மற்றும் சக ஐ பி எஸ் நண்பர்கள் துணையோடு கிளம்புகிறான் அந்த போலீஸ் அதிகாரி இளைஞன் . அராஜக அரசாங்கத்தை நடத்தும் அந்தத் தனி ஒருவனை ஒரு சில நண்பர்கள் துணையோடு இந்த நேர்மையான தனி ஒருவன் எதிர்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதே ..

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, மோகன் ராஜா இயக்கத்தில் வந்திருக்கும் தனி ஒருவன்

வித்தியாசமான — வீரியமான திரைக்கதை இந்தப் படத்தின் பெரும்பலம் . ஜெயம் ரவி , அரவிந்த்சாமி இருவரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மாபெரும் பலம் .

வில்லனின் உடன் இருக்கும் அழகி உட்பட ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான கதைகளை வைத்து அதை திரைக்கதையின் நீரோட்டத்தில் கலக்க வைத்த விதம் வெகு சிறப்பு .

ஒரு வணிக ரீதியான வெற்றிப் படத்துக்கு முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம் .

கல்லறைக் கல்வி, பண்ணைப் பள்ளிகள், உயிர் குடித்த தண்ணீர் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் … ” உன் நண்பன் யார் என்பதை வைத்து உன் கேரக்டரை சொல்லலாம் ; ஆனா உன் எதிரி யார் என்பதை வைத்துதான் உன் கெப்பாசிட்டியை சொல்ல முடியும் ” ஈன்பது போன்ற வசனங்கள் …

இதுவரை ரீமேக் படங்களையே இயக்கி வந்த ஜெயம் ராஜா முதன் முதலில் சொந்தக் கதையில் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் மொழியின் பயன்பாடுகள் மிக அருமை .

ஓர் இக்காட்டான சூழலில் நாயகன் நாயகியிடம் காதல் சொல்லும் விதமும் , கவிதையான அழகு. நம்மை மறந்து கைதட்டி விடுகிறோம் .

ஜெயம் ராஜா உணர்ந்து நடித்து இருக்கிறார் . அரவிந்த் சாமி வில்லனாக ரசித்து நடித்து இருப்பதால் நாமும் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம் .

வில்லன்கள் சம்மந்தப்பட்ட இடத்துக்கு ஜெயம் ரவி ஏதோ ஷாப்பிங் காம்ப்ளக்சுக்குள் போவது போல போய்க் கொண்டே இருப்பது பக்கா சினிமாத்தனம் . சமூகத்துக்கு தேவையான விஷயத்தை எடுத்துக் கொண்டு அதற்கு முழுக்க முழுக்க சினிமாத்தனமாக டிரீட்மென்ட் கொடுத்து இருப்பது வில்லன் செய்யும் அக்கிரமத்துக்கு இணையான அக்கிரமம்.

பழனி என்கிற சித்தார்த்தின் தந்தையாக அரசியல் தொண்டன் கம் அமைச்சர் வேடத்தில் காமெடியிலும் கடைசி காட்சியில் உருக்கத்திலும் விளையாடி இருக்கிறார் தம்பி ராமையா .

கடைசி நேர திருப்பங்கள் அருமை .

சக்கரை வியாதிக்காரர்கள் அதிகம் உள்ள இந்தியக் கடல்பகுதியில் மட்டுமே சக்கரை வியாதிக்கு மிக சரியான மருந்தான நொச்சி என்ற தாவர மருந்து இருக்கிறது . அதை பயன்படுத்தி சர்க்கரை நோயை குறைந்த செலவில் அதி விரைவில் முற்றிலும் குணமாக்கும் மருந்து தயார் செய்ய முடியும் . அதை செய்ய விடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியை இந்திய அரசை நோக்கு வீசி இருப்பதன் மூலம் கம்பீர ஜொலிப்புக் காட்டுகிறது இந்தப் படம்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...