Wednesday 12 August 2015

சென்சாருக்கு வேலையை குறைத்த இயக்குனர்


பல திரைப்பட இயக்குனர்களுக்கு சென்சாருடன் பிரச்சை ஏற்படுவது சகஜமான விஷயம் தான். காரணம் கதைக்கு தேவை என இவர்கள் காட்சிபடுத்தப்பட்ட காட்சிகளை நீக்க சொல்லுவார்கள் காரணம் அதில் ஆபாசமோ அல்லது வன்முறையோ அதிகமாக இருக்கும் என்பதால்.

ஆனால் சென்சாருக்கு அந்தளவுக்கு கஷ்டம் கொடுக்காமல், லேக்கின்ஸ் காலத்தில் கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் 'ரிங்காரம்' எனும் படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் சிவகார்த்திக். இவர் அரசு சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர்.

26 நாட்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளார் அவர். இப்படத்திற்காக நடிகருக்கு ஆறு மாதம் பயிற்சி அழிக்கப்பட்டதாக கூரபடுகிரது. இதை பற்றி இயக்குனர் கூறுகையில்,

26 நாள்ல முழுப் படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம், இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. கதாநாயகனுக்கு 6 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்தோம்.. படம் முழுவதுமே வசன மொழி குறைவு, உடல் மொழி அதிகம், அதுக்காக அவரைத் தயார் செய்ய ஆறு மாசமாச்சு……
லெக்கின்ஸ் காலத்தில் கவர்ச்சியே இல்லாம படம் செய்வது மிகப்பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணிருக்கோம்ங்கிறது மிகப்பெரிய சந்தோஷம். “வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது…  அந்த யூகிக்க முடியாத திசையோட ஒரு பக்கம்தான் ரீங்காரம். ரீங்காரம் வெற்றிக்கான அங்கீகாரமாக மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார் சிவகார்த்திக்.​

இப்படத்தை ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ​ஸ்டூடியோ இனைந்து தயாரித்துள்ளனர். புதுமுகம் பாலா கதானாயகனாக நடிக்கிறார், ’கங்காரு’, ’வந்தாமல’ படங்களில் நடித்த பிரியங்கா ஹீரோயினாகவும், கலாபவன்மணி, ஆடுகளம் ஜெயபாலன், சிந்தியா, சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன் ஹரீஸ். இசையமைத்திருக்கிறார் அலி மெர்சா.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...