Tuesday 25 August 2015

கொவுதம் மேனனை கேள்விகேட்ட ராஜா மௌலி


சமிபத்தில் வெளிவந்த நாள் முதல் இன்று வரை அனைவரின் மனதில் இடம் பிடித்த பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய S.S.ராஜா மௌலி, இவர் இதுவரை இயக்கிய படங்களும் வெற்றியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு காதல் சமந்தமான படங்கள் தனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் இவருடன் கலந்து கொண்ட கொவுதம் மேனனிடம் ஒரு கேள்விகேட்டார், எனக்கு காதல் படங்களின் மேல் ஈடுபாடு இல்லை. ஆனால் உங்களது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை என்னை வலுக்கட்டாயமாக பார்க்க வைத்தனர். முதலில் விருப்பம் இல்லாமல் இருந்த எனக்கு போக போக படம் என்னை கதைக்குள் இழுத்தது. எப்படி இந்த ஜெஸ்ஸி கதாபாத்திரத்தை உருவாக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கௌதம் மேனன் உங்கள் மகனுக்கு என்ன வயது. அவன் பருவமடைந்து காதலில் விழும் போது ஜெஸ்ஸி எப்படி உருவானது என்று தெரியும் என நகைச்சுவையாக சிரித்துகொண்டு பதிலாளித்துள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...