Tuesday 11 August 2015

பேய் வீட்டில் ஷூட்டிங், பதறி போன படக்குழுவினர்


தமிழ் திரை உலகின் தற்போதய டிரன்ட் செட்டராக அமைந்துள்ளது பேய் படங்கள். ஆம் எப்பொழுதும் இல்லாதவாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் நிறைய பேய் படங்கள் வெளியாகின.

அந்த வரிசையில் தற்போது 'கா கா கா' என்ற படம் உருவாகி வருகிறது, மற்ற படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால் இவர்கள் நிஜமாகவே ஒரு பேய் வீட்டில் சென்று ஷூட்டிங் நடத்தியுள்ளனர் ஆனால் அப்போது அவர்கள் இதை அறியாதிருந்தனர். ஷூட்டிங்கின் பொது நடந்த நிறைய அமானுஷ்யமான விஷயங்களை கண்டு பயந்துள்ளனர் பலர், கடைசியில் விசாரித்து பார்த்தால் தான் தெரிந்ததாம் அது உண்மையாகவே பேய் வீடு என்று. இருந்தாலும் அது ஒரு புது அனுபவம் தான் என கூறுகின்றனர் படக்குழுவினர்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது மேலும் குறித்த நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிப்பதால் படத்தின் இயக்குனரான மனோன் அவர்களை பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் கிரண் பதிகொண்டா. இதை பற்றி இயக்குனர் கூறுகையில் இதற்கு தன் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் தான் காரனும் எனவே இந்த பாராட்டு அவர்களை தான் சேரும் என்றார்.

இப்படத்தில் அசோக், கிரண், மேகாஸ்ரீ, சங்கீதா பட், யோகி பாபு, நாசர், ஜெயசுதா மற்றும் பலர் நடிக்கின்றனர். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...