Tuesday 25 August 2015

கசிந்தது ரஜினி கெட்டப் - கபாலி அப்டேட்ஸ்

ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்த நாள் முதல் அவரது ரசிகர் மத்தியில் இருக்கும் பெரும் எதிர்பார்ப்பு படத்தில் அவரின் கெட்டப் பற்றி தான். அதுவும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் என்றவுடன் எகிறியது எதிர்பார்ப்பு அதுவும் தாதாவாக நடிக்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு டபுள் மடங்கு ஆனது.

இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர், இதற்காக கடந்த வாரம் போடோஷூட்டும் நடைபெற்றது. ஆனால் அன்று படத்திர்கான கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் யாரோ ஒருவர்.

இன்று அனைத்து சமூக வலைதளங்களிலும் சுற்றித்திருந்துகொண்டிருக்கிறது அந்த புகைப்படம். இதனால் அப்சட்டில் உள்ளனர் படக்குழுவினர்.

இதற்கு முன் புலி படத்தின் சில புகைப்படங்களும் இப்படி கசிந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் மாதம் மலேசியாவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர் படக்குழுவினர். படத்தில் ரஜினியுடன் நடிக்கின்றனர் அட்டைக்கத்தி தினேஷ், கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்.

இப்படத்திற்கு கபாலி என பெயரிட்டுள்ளனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...