Friday 7 August 2015

ஆரம்பமாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கு ரஞ்சித் இயக்கும் படத்தின் படபிடிப்பு

தற்போது ரஜினிகாந்த் லிங்கா படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருப்பது நம் எல்லோருக்கும் தெரியும், ரஞ்சித்  மலேசியாவில் படபிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமிபத்தில் ரஜினி நடித்து வெளிவந்த லிங்கா படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றும் இந்த சமயத்தில் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் ரஞ்சித்தின் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி ரஜினி மலேசியாவிற்கு செல்வதாகவும் 18 ஆம் தேதி படபிடிப்பை தொடங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் S. தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...