Thursday 13 August 2015

காந்தி ஜெயந்தி அன்று வெளிவருகிறது 'நானும் ரவுடி தான்'


அஹிம்சைக்காக போராடியவர் காந்தி அவர்கள்,  அவரின் பிறந்த நாள் தான் காந்தி ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது. ஆனால் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி 'நானும் ரவுடி தான்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இது தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிடப்பட்டு வெளியிடபடுகிறதா என்பது தெரியவில்லை.

நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் இப்படத்தின் போது காதல் மலர்ந்ததும் பின் பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார் நடிகர் தனுஷ். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...