Saturday 15 August 2015

கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் வரிசையில் வீர பாண்டிய கட்டபோம்மன்


தமிழ் சினிமாவில் புதிதாக எத்தனை படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தாலும் நவீனபடுத்தப்பட்டு வெளியான 'கர்ணன்' படத்திற்கு இருந்த வரவேற்ப்பை பார்த்து வியந்தனர் தமிழ் திரை உலகினர்.

அதன் பின்னர் வரிசையாக நவீனபடுத்தப்பட்டு வெளியாகின வசந்த மாளிகை, நினைத்தாலே இனிக்கும், ஆயிரத்தில்.

முன் குறிப்பிட்ட படங்களை தொடர்ந்து தற்போது நவீனபடுத்தப்பட்டு வெளியாக உள்ளது சிவாஜி கணேசனின் நடிப்பில் ஆம் ஆண்டில்
பி, ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வீர பாண்டிய கட்டபொம்மன்.

இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...