Tuesday 11 August 2015

கமல் படத்தினை வாங்கவில்லை, விளக்கம் கொடுக்கும் லிங்குசாமி

பாபநாசம் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் 'தூங்காவனம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தான் முடிவடைந்தது, இந்நிலையில் இப்படத்தினை லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வாங்கி வெளியிடுவதாக செய்திகள் பரவின அனால் அவை உண்மை அல்ல என தெரிவித்துள்ளார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி.

கமல் ஹாசனின் முந்தைய படமான  'உத்தம வில்லன்' படத்தினை கமலுடன் சேர்ந்தது தயாரித்தார் லிங்குசாமி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்னொரு படம் கமலுடன் சேர்ந்து பண்ணுவார் என தான் கூறிய கருத்தினால் தான் இந்த வந்தது பரவியது என யூகிக்க முடிகிறது.

திருப்பதி பிரதர்ஸ் அடுத்து ஜிகினா, இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன் ஆகிய படங்களை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...