Thursday 6 August 2015

சூர்யாவுடன் போட்டிபோடும் தனுஷ்

மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ப்ரேமம்’. மலையாளத்தில் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிகொண்டிருகிற நிலையில்.

இப்படத்தை தமிழில்  ரீமேக் செய்ய முடிவு எடுத்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா மற்றும் தனுஷ் இருவருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படத்தை இயக்க கெளதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், வாரணம் ஆயிரம்  சாயல் இப்படத்தில் இருப்பதால் ரீமேக்கை இயக்குவதில் இருந்து விலகிவிட்டார். யாரை இயக்க வைக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

தற்போது இப்படத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருகின்றனர், இப்படம் பள்ளி காலத்திலிருந்து ஆரம்பிப்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...