Tuesday 11 August 2015

தாணு தயாரிப்பில் இயக்குனராகும் ஷோபி


நடன இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் நடன இயக்குனர் ஷோபி. ஒரு ஆண்டில் வெளியாகும் பல பாடல்களுக்கு நடன இயக்குனர் இவர் தான். மேலும் கூற வேண்டும் என்றால் கோலிவுட்டின் டாப் ஹீரோஸ் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடன இயக்குனர் ஷோபி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய், விஷால், சூர்யா என அனைவரையையும் வித்யாசமாக ஆட வைத்த பெருமை ஷோபி மாஸ்டருக்கு உண்டு. தமிழ் அல்லாது தெலுங்கு பட உலகிலும் பெரும் இடத்தை பிடித்தவர் இவர்.

சமீபத்தில் நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது, இதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் ஷோபி. நேற்றைய தினம் பதவி ஏற்ப்பு விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்டு வாழ்த்தினர் பல திரை ஜாம்பவான்கள்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு அவர்கள் பேசுகையில், தான் பல நாட்களாக ஷோபியை நடிகராக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் சபையிலேயே தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஷோபி இயக்குநராக ஒரு படம் செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார், எனவே தாணு தயாரிப்பில் ஷோபி இயக்கத்தில் விரைவில் ஒரு நல்ல படம் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...