Tuesday 4 August 2015

சாஹசம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் சிம்பு

மிக நீண்ட நாட்களாக  சாஹசம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை தி நகரிலுள்ள பிரஷாந்த் ஜுவல்லரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநரான தியாகராஜன். படம் சம்பந்தமான சில தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.


இதில் அவர் பேசியதாவது, என் மகன் பிரஷாந்த் மற்றும் நடிகை அமண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹசம் திரைப்படம் இறுதிகட்டதை எட்டியுள்ளது, இப்படத்திற்காக அற்புதமான இசையை எங்களுக்கு தந்த இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு எங்களுடைய நன்றி. இம்மாதத்தில் சாஹசம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். சாஹசம் திரைப்படத்தையும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திரைக்கு கொண்டு வந்துவிடுவோம் என கூறினார்.

சாஹசம் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் இந்தியாவின் டாப் பாடகர்கள் பாடியுள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மீது பலர் எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி நடிகர் சிம்பு சாஹசம் படத்தின் மோஷன் போஸ்டரை நாளை மாலை 7 மணிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக தியாகராஜன் கூறியுள்ளார்.

மேலும் சாஹசம் படத்தில் ”சயாங் ஹு” என்ற பாடல் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல அற்புதமான இடங்களில் இப்பாடலை படமாக்கியுள்ளனர். இதனால் மலேசியாவில் இப்பாடல் பெரிய வரவேற்பை பெரும் என நம்பிக்கையுடன் கூறினார் தியாகராஜன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...