Saturday 8 August 2015

குரங்கு கைல பூமாலை திரைவிமர்சனம்

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவன் , பார்க்கும் பெண்களை எல்லாம் என்ன விலை கொடுத்தாவது வீழ்த்துகிறான். அதில் இருந்து தப்பும் பெண்களையும், தன்னை கண்டிக்கும் பெண்களையும் வஞ்சத்தோடு பழிவாங்க முயல்கிறான்.

ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்கும் ஒரு பெண்ணை உண்மையாக காதலித்து, அதனால் அவமனனங்களையும் இழப்புகளையும் சந்திக்கும் ஒருவன், அதன் பிறகு எல்லா காதலர்களின் வாழ்விலும் பிரச்னை செய்கிறான்.

பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பது தெரியாமல் அக்கா மகளைத்தான் திருமணம் செய்வேன் என்று வலுக்கட்டாயம் செய்கிறான் ஒருவன்.

தனது உண்மையான காதளை சம்மந்தபட்ட பெண்ணிடம் சொல்ல வழி தெரியாமல், முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போக தற்கொலைக்குப் போகிறான் ஒருவன் .

இந்த நால்வரிடமும் சிக்கும் ஒரு பெண்ணுக்கு கடைசியில் என்ன ஆனது என்பதே ,

சாய் அமீர் புரடக்ஷன் கே. அமீர் ஜான் தயாரிக்க , ஜகதீஷ், கவுதம் கிருஷ்ணா , பிரவீன் குமார் , கணேஷ், சாந்தினி , நிஷா, சரவண சுப்பையா ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஜி.கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு கைல பூமாலை’ .

தப்பானவன் என்று எண்ணி ஹீரோவை ஹீரோயின் திட்டிவிட , அதன் பின் அவனிடம் மன்னிப்புக் கேட்க போன் செய்யும்போது எல்லாம் அவனுக்கு ஆபத்து நடப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

ஷேர் ஆட்டோவில் தவறாக நடந்து கொல்பவனைக் கண்டிக்காமல் இருப்பதற்கு ஓர் ஏழைப்பெண் சொல்லும் காரணம் நெகிழ்ச்சி.

தவறான நபர்களை கதாநாயகி அந்த நபர்களுக்கு வேண்டியவர்களிடம் போட்டுக் கொடுக்கும் காட்சிகள் சிறப்பு. வில்லனை போலீசில் போட்டுக் கொடுக்கும் காட்சியும் அப்படியே .

தெளிவான , சுவாரஸ்யமான , யதார்த்தமான குழப்பம் இல்லாத திரைக்கதை , பொருத்தமான வசனங்கள், நல்ல ஒளிப்பதிவு இவையெல்லாம்தான் மிஸ்ஸிங் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...